உதயகுமார் இந்தியர்களுக்காக சிறை செல்லத் தயார்

1 uthayஇண்ட்ராப் நிறுவனர் பி.உதயகுமார், இந்தியர் நலனுக்காக சிறை செல்லவும் தயார் என்று அறிவித்துள்ளார். சட்டமுறையில் நியாயம் கிடைக்கும் என்பதில் அவருக்கு நம்பிக்கை போய் விட்டது.

கோலாலும்பூர்  செஷன்ஸ் நீதிமன்றத்தில், தேச நிந்தனைக் குற்றச்சாட்டுக்கு எதிராக தாம் எதிர்வாதம் செய்யப்போவதில்லை என்றாரவர்.  நீதிமன்றம்  அவருக்கு எதிராக வழக்கு தொடுக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாக முடிவு செய்து அவரை விசாரணைக்கு அழைத்துள்ளது.

“நீதிமன்றம் என்னைத் தண்டிக்கட்டும். கவவை இல்லை. ஏழை இந்தியர்களின் துயரங்களைக் கவனப்படுத்துவதற்குக் கிடைத்த மேலும் ஒரு வாய்ப்பாகத்தான் இதை நான் பார்க்கிறேன்.

“யாராவது ஒருவர் விலை கொடுக்கத்தான் வேண்டும்.  எப்படியோ, அந்த யாரோ ஒருவர் மீண்டும் நானாகவே இருக்கிறேன்.  ஒவ்வொரு போராட்டத்திலும் ஒரு விலை கொடுக்கத்தான் வேண்டியிருக்கும்”.  மலேசியாகினி அவரைத் தொடர்புகொண்டு பேசியபோது  உதயகுமார் இவ்வாறு கூறினார்.

தேச நிந்தனைக் குற்றச்சாட்டு வழக்கு விசாரணைக்குச் செல்லாததால் அவருக்கு எதிராக நீதிமன்றம் ஏப்ரல் 29-இல் பிடிஆணை வெளியிட்டது.

உதயகுமார் 2007-இல் இருந்தே தேச நிந்தனைக் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.  அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுனுக்கு அவர் எழுதிய கடிதம் தேச நிந்தனை கருத்தைக் கொண்டிருந்ததாகக் கூறி அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது.

அவரது வழக்கு அடுத்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் கே எல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

TAGS: