ஸாஹிட் ஹமிடி உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் பல துயரமான மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கொள்கைகளிலும் சீரான நடைமுறைகளிலும் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன
கருணாநிதி கடந்த 11 நாட்களில் போலீஸ் தடுப்புக் காவலில் மரணமடைந்த மூன்றாவது நபர்
சின்ன அரக்கன்: உண்மையில் வெறுப்பை அளிக்கிறது. இந்த நாட்டில் இந்தியர்களுடைய உயிர்கள் என்ன அவ்வளவு மலிவானவையா ? மதிப்பற்றவையா ? ஒவ்வொரு நாளும் ஒர் இந்தியன் போலீஸ் லாக்கப்பில் இறக்க வேண்டுமா ? மலேசிய ஹிண்ட்ராப் சங்கத் தலைவரும் ‘திடீர்’ துணை அமைச்சருமான பி வேதமூர்த்தி எங்கே போனார் ?
போலீஸ் தடுப்புக் காவல் மரணங்களுக்கு பிஎன் அரசாங்கத்தைக் குறைகூறுவதற்கு தமக்கு துணிச்சல்
இருக்காது என்பதைத் தெரிந்து கொண்ட பின்னர் பிஎன் -னுடன் செய்து கொண்ட ‘ஒப்பந்தத்தில்’
வேண்டுமென்றே மனித உரிமைக் கோரிக்கையை வேதமூர்த்தி நீக்கி விட்டாரா என இந்திய சமூகம்
இப்போது கருதினால் என்ன தவறு ?
வேதமூர்த்திக்கு சூடு சொரணை இருந்தால் அவர் இப்போது தமது துணை அமைச்சர் பதவியைத் துறந்து
விட்டு தம்மை மன்னிக்குமாறு இந்திய சமூகத்தை கேட்டுக் கொள்ள வேண்டும்.
தூனார்மி: ஸாஹிட் ஹமிடி உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் பல துயரமான மரணங்கள்
நிகழ்ந்துள்ளன. அதிகமான மலேசியர்கள் உயிரிழப்பதற்கு கொள்கைகளிலும் சீரான நடைமுறைகளிலும்
என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த நாட்களில் போலீஸ் தடுப்புக் காவல் என்பது மரண
தண்டனையைப் போன்று தோற்றமளிக்கின்றது.
ஒடின்: 2012ல் மட்டும் 9 பேர் போலீஸ் தடுப்புக் காவலில் மரணமடைந்துள்ளனர். இவ்வாண்டு இது
வரையில் எட்டும் பேர் இறந்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் மூவர். அவர்கள்
இந்தியர்கள். அந்த அநீதிக்கு தீர்வு காண தேசிய போலீஸ் படைத் தலைவரும் பிரதமர் நஜிப் அப்துல்
ரசாக்கும் அக்கறை காட்டவில்லை.
இந்தியத் தலைவர்களே அந்த மரணங்கள் குறித்து ஆட்சேபம் தெரிவிக்காத போது அவர்கள் ஏன்
கவலைப்பட வேண்டும் ? மஇகா என்ன செய்கின்றது ?
என் தர்மேந்திரன் மரணத்தில் சம்பந்தப்பட்ட நான்கு போலீஸ்காரர்களும் இடைநீக்கம் செய்யப்பட
வேண்டும் என்றும் மட்டுமே வேதா கேட்டுக் கொண்டுள்ளார். அந்த விஷயத்தில் இடைநீக்கம் மட்டும்
போதுமா ?
ஜனநாயகம்: லாக்கப்பில் ஒருவர் மரணமடைந்தால் அவர்கள் ஏன் அதனை சாதாரணமாக எடுத்துக்
கொள்கின்றனர் ? இந்த நாட்டில் சட்டங்கள் பின்பற்றப்படுவதில்லை. கொலை வழக்கு என்றால்
நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட வேண்டும். ஆனால் இங்கு போலீஸ்காரர்களாக உள்ள
சந்தேகத்துக்குரிய நபர்களுக்கு மேசை வேலைகள் கொடுக்கப்படுகின்றன.
மூங்கில்: சந்தேகத்துக்குரியவரோ இல்லையோ போலீஸ் லாக்கப்பில் யாரும் மரணமடையக் கூடாது.
IPCMC என்ற போலீஸ் புகார்கள் தவறான நடத்தை மீதான சுயேச்சை ஆணையத்தை அமைக்க
வேண்டிய நேரம் வந்து விட்டது.
Pahatian: மலேசியாவில் இந்தியர்கள் மிருகங்களைக் காட்டிலும் மோசமாக நடத்தப்படுகின்றனர்.
போலீஸ் நிலையங்களுக்குச் செல்வது எப்போதும் ஒரு வழி டிக்கெட்டுக்காகவே இருக்கிறது.
மிருகங்களுக்காவது அவற்றைப் பாதுகாக்க SPCA என்ற மிருக வதைத் தடுப்புக் கழகம் உள்ளது.
இந்தியர்களுக்கு யார் இருக்கின்றார்கள் வேதமூர்த்தியா ? மஇகா-வா ?
ரென் அலி: போலீசார் நீதிபதியாகவும் நடுவர்களாகவும் தண்டனையை நிறைவேற்றுகின்றவர்களாகவும்
இருக்கக் கூடாது. என் தர்மேந்திரன் மூவரைக் கொலை செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. பி கருணாநிதி
குடிகாரர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தச் சூழ்நிலைகளில் தீர்ப்பு வழங்குவது எளிது. ஆனால் அது நீதிமன்றத்தில் செய்யப்பட வேண்டும்.
லாக்கப்பில் அல்ல. அதுவும் விசாரணையாளர்களினால் அல்ல.
பிஎன் -னைத் தவிர வேறு எதுவானாலும் பரவாயில்லை: சாலைகளைக் காட்டிலும் போலீஸ்
நிலையங்களில் தான் அதிகமான மக்கள் மரணமடைவதாக எனக்குத் தோன்றுகிறது.