‘தண்டா புத்ரா திரையீடு நஜிப் பாணி சமரசம்’

putraஉங்கள் கருத்து : “13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் மீது தேச நிந்தனைப் பழி  சுமத்தப்பட்ட பின்னர் தேச நிந்தனைக்குரிய அந்தத் திரைப்படம் திரையிடப்படுவது சந்தேகத்தை  ஏற்படுத்துகின்றது”

தண்டா புத்ரா ஆகஸ்ட் 29ல் திரையிடப்படும்

ஹாங் பாயூப்: ‘தண்டா புத்ரா’ பொது மக்கள் காண திரையிடப்படவிருக்கிறது. அந்த முடிவுக்கான நேரம் காரணமும் மிகவும் தெளிவானது.

“அம்னோவிலுள்ள நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம். நாங்கள் இப்போது ஆட்சி செய்வதோடு எதிர்காலத்தையும் முடிவு செய்வோம். கடந்த காலத்தையும் நிர்ணயம் செய்வோம்.”

“தண்டா புத்ரா சொல்லும் கொடூரமான கதை நாங்கள் விரும்பும் கடந்த காலமாகும். அது எங்கள் கடந்த காலம் மட்டுமல்ல. நீங்கள் ஒவ்வொருவரும் பெற்றிருக்க வேண்டிய பகிர்ந்து கொள்ள வேண்டிய காலமும் அது தான். கடந்த காலத்தை மக்கள் அப்படித் தான் பார்க்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் விரும்பும் கடந்த காலமும் அது தான். ஆகவே அது தான் முக்கியம்.”

“நாங்கள் வெற்றி பெற்றுள்ளதால் கடந்த காலம் எங்கள் உரிமை. ஆகவே அதற்குப் பழகிக்
கொள்ளுங்கள். நாங்கள் சொல்லும் உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள். அது எங்களுடையது
மட்டுமல்ல. விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அது உங்களுடையதும் தான். அதனைச் செய்யும் அதிகாரம் எங்களிடம் உள்ளது.”

பூன்பாவ்: தண்டா புத்ராவை கூடிய விரைவில் திரையிடுங்கள். மலேசிய கிராமப் புறங்கள் அனைத்திலும் அதனைக் காட்டுங்கள்.

தீவகற்ப மலேசியாவில் தகவல் அறிந்த மலேசியர்கள் தங்கள் சொந்த மே 13 பதிப்பை தயாரிப்பார்கள். அது குவா கியா சூங் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

பின்னர் நாங்கள் எந்த பதிப்பு நம்பத் தகுந்தது என்பதை முடிவு செய்வோம். மலேசியாவின் அந்த
இருண்ட வரலாற்றுக்கு பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.
குறிப்பாக சொன்னால் மலேசியத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மானுக்கு எதிராக புரட்சி செய்தவர்கள்
யார் என்பதாகும்.

உங்கள் பிரச்சாரத் திரைப்படத்தை வெளியிடுங்கள். ஆனால் இந்த முறை அது வேலை செய்யாது. 53
விழுக்காடு மலேசியர்கள் உங்களுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். உங்களுக்கு அது தெரியாதா ?

நாங்கள் குவா எழுதிய மே 13 புத்தகத்தைப் படித்துள்ளோம். மே 13 தொடர்பாக எங்களுக்குப் பல
தசாப்தங்களாகத் தெரிந்த விவரங்களை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். அது ஊரறிந்த ரகசியம்.

ஆகவே உங்களுடைய பிரச்சாரப் படத்தை வெளியிடுங்கள். மே 13 குறித்த பொது ரகசியத்தையே அது உறுதி செய்யப் போகிறது.

Whatsup: தேச நிந்தனை அது என்ன ? அம்னோ அங்கீகாரம் இருந்தால் எல்லாம் சரியே.

ஆனால் இன்னும் பலர் பார்வையற்றவர்களாக இருக்கின்றனர். அல்லது அமைதியாக இருக்கின்றனர். தாங்கள் முழுங்கிய ரிங்கிட்டில் மூழ்கி பொய்களைப் பரப்புகின்றனர். பொறுமையில்லாத சிலர் மேற்கொண்ட புரட்சியே மே 13 என்பது பலருக்குத் தெரியும்.

3வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் மீது தேச நிந்தனைப் பழி
சுமத்தப்பட்ட பின்னர் தேச நிந்தனைக்குரிய அந்தத் திரைப்படம் திரையிடப்படுவது சந்தேகத்தை
ஏற்படுத்துகின்றது.

மார்க் அந்தோனி: அந்தப் படம் அரசாங்க நிதியில் அதாவது மக்கள் பணத்தில் தயாரிக்கப்பட்டது.
அதனை தயாரித்த நிறுவனம் படம் திரையிடப்பட்டதும் லாபம் அடையப் போகிறது. ஆகவே
தெளிவான சிந்தனையைக் கொண்ட மலேசியர்கள் அந்தப் படத்தை புறக்கணிக்க வேண்டும்.

சூஜிலியாங்: ஏன் ஒரு பொய்யை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் ? உண்மையை மறைக்க வேண்டும் என்ற எண்ணமா ?

மே 13க்கு பின்னணியில் யார் இருந்தார்கள் என்ன காரணம் என்பதை தமது தந்தை காலஞ்சென்ற துன் கபார் பாபா தம்மிடம் சொல்லியிருப்பதாக தம்ரின் அப்துல் கபார் தெரிவித்துள்ளார்.

அப்போது உள்துறை அமைச்சராக இருந்த கசாலி ஷாபியும் அதனை உறுதி செய்துள்ளார்.

முகமட் காமிஸ் மஸ்லான்: அம்னோ/பிஎன் -னுக்கு என்ன நேர்ந்தது ? 14வது பொதுத் தேர்தலில்
அவற்றுக்கு ஆர்வம் இல்லையா ? மே 13 துயரச் சம்பவத்திற்குப் பின்னணியில் உள்ள உண்மையை
மக்கள் அறிந்துள்ளனர்.

தம்ரினும் விவரமாக தெரிவித்துள்ளார். பல இளைஞர்களுக்கு இப்போது அது தெரியும். ஆகவே
அதனை நீங்கள் தொடர்ந்து சொல்லச் சொல்ல மலாய்க்காரர் வாக்குகள் மேலும் இழக்கப்
போகின்றீர்கள்.

TAGS: