வெளிநாடுகளில் உள்ள 6,564 மலேசியர்களின் கடப்பிதழ்கள் இரத்துச் செய்யப்படும் என்று கூறப்பட்டிருப்பது பற்றி குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் அலியாஸ் அஹ்மட்டுடன் விவாதிக்க பெர்சே மேற்கொண்ட முயற்சி ஈடேறவில்லை.
அவரை சந்திக்க பெர்சே இயக்கக்குழு உறுப்பினர் மரியா சின் அப்துல்லா இன்று அவரது அலுவலகம் சென்றார். ஆனால், அலியாஸ் காலையிலேயே ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பதாக அவரிடம் கூறப்பட்டது. பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் இதனைத் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அம்பிகா, குடிநுழைவுத் துறை தலைவரைச் சந்திக்க நேரம் கேட்டு கடந்த வெள்ளிக்கிழமையே கடிதம் எழுதியதாகவும் நேற்று மீண்டும் ஒரு கடிதம் அனுப்பட்டதாகவும் கூறினார்.
“அவர்களே எங்களைத் தொடர்புகொண்டு எப்போது சந்திக்கலாம் என்பதை தெரிவிப்பதாக சொல்லி இருக்கிறார்கள். கடப்பிதழ்கள் இரத்துச் செய்யப்படும் என்று கூறுவது பற்றி விளக்கம் பெற அடுத்த வாரமாவது அலியாஸைச் சந்தித்து முடியும் என எதிர்பார்க்கிறோம்”, என்றாரவர்.
குடிநுழைவுத் துறைக்கே அவர் ஒருவர் தான் தலைமை இயக்குனர், அவரை சந்திப்பென்பது சாதாரண விஷயம் அல்ல. அவர் அம்னோ தரப்பு கூப்பிட்டால் ஒழிய மற்றவர்களுக்கு நேரம் ஒதுக்க நேரமில்லை!