இரண்டு மஇகா உயர் தலைவர்களை வேள்பாரி சாடுகிறார்

vel paariபோலீஸ் தடுப்புக் காவலில் அண்மைய காலமாக நிகழ்ந்துள்ள மரணங்கள் தொடர்பில்- பெரும்பாலும்  இந்திய சமூகம் சம்பந்தப்பட்டவை- ஆட்சேபம் தெரிவிப்பதற்காக பெரிய அளவில் ஆர்ப்பாட்டம்  செய்ய மஇகா திட்டமிடுகின்றது.

எப்போது எங்கு அந்த சாலை ஆர்ப்பாட்டத்தை நடத்துவது பற்றி விவாதிக்கத் தாம் இந்த வாரம் மற்ற  அரசு சாரா அமைப்புக்களுடன் விவாதம் நடத்தப் போவதாக அந்தக் கட்சியின் வியூக இயக்குநர் எஸ்  வேள்பாரி கூறினார்.

அதிகாரிகள் குறித்து ஏமாற்றம் தெரிவிப்பதற்காக ஆர்ப்பாட்டத்திற்குத் திட்டமிடப்படுகின்றது என அவர்
சொன்னார்.

“IPCMC என்ற போலீஸ் புகார்கள், தவறான நடத்தை மீதான சுயேச்சை ஆணையத்தை அமைப்பதற்கு
அந்த சாலை ஆர்ப்பாட்டம் உதவுமானால் அப்படியே இருக்கட்டும்,” என்றார் வேள்பாரி.

“போலீஸ் தடுப்புக் காவல் மரணங்கள் அதிகமாகி வருகின்றன. ஆனால் அத்தகைய சம்பவங்கள்  இன்னொரு மரணம் நிகழ்ந்ததும் விரைவாக மறக்கப்பட்டு விடுகின்றன.”

vel2அமைச்சரவையில் மஇகா-வுக்கு இரண்டு பிரதிநிதிகள் உள்ளனர். நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரைக்  கேட்டுக் கொள்ளும் கடமை அவர்களுக்கு உள்ளது என்றும் வேள்பாரி சொன்னார்.

அவர் மஇகா தலைவர் ஜி பழனிவேலையும் துணைத் தலைவர் டாக்டர் எஸ் சுப்ரமணியத்தையும்
சாடினார்.

“இது போன்ற சம்பவங்கள் நிகழும் ஒவ்வொரு முறையும் அரசாங்கம் ஏதாவது செய்ய வேண்டும் என  நீங்கள் ஏன் சொல்ல வேண்டும் ?”

“நீங்களும் அரசாங்கத்தில் இல்லையா ? வெளியில் சத்தம் போட்டு விட்டு அமைச்சரவையில் அந்தப்  பிரச்னையை எழுப்பத் தவறுவது ஏன் ?”

அமைச்சரவையில் பழனிவேல் (இயற்கை வள அமைச்சர்), சுப்ரமணியம் (சுகாதாரம்) ஆகியோர்  மஇகா-வைப் பிரதிநிதிக்கின்றனர்.

“மஇகா இந்தியர்களுக்கு தாய் கட்சி என நீங்கள் சொல்கின்றீர்கள். ஆனால் போலீஸ் லாக்கப்பில்
சாகும் இந்தியப் பையன்களைப் பற்றி நீங்கள் அக்கறை காட்டுவதில்லை,” என்றார் அவர்.

-மலாய் மெயில்