தடுப்புக் காவலில் நிகழ்ந்த என். தர்மேந்திரனின் மரணத்தில் தொடர்புள்ள போலீஸ் அதிகாரிகள் இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அவர்கள்மீது கொலைக்குற்றம் சுமத்தப்படும்.
“விசாரணைகளில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள்மீது குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின்கீழ் கொலைக்குற்றம் சாட்ட முடிவு செய்துள்ளேன்”, என்று சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேல் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
“இன்று பிற்பகல் அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்திக் குற்றம் சாட்டப்படுவர்”.
எத்தனை பேர் அதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை அந்த அறிக்கை குறிப்பிடவில்லை.
31-வயது தர்மேந்திரன் கோலாலும்பூர் போலீஸ் தலைமையகத்தின் லாக்-அப்பில் இறந்து கிடக்கக் காணப்பட்டார் என கனி கூறினார்.
துப்பாக்கி ஏந்தி கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின்பேரில் தர்மேந்திரன் மே 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டு மே 12-இலிருந்து விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தார். தடுப்புக் காவலில் இருந்தபோது அவர் இறந்தார்.
குற்றம் சாட்டப்பட்ட நால்வரில் ஒருவர் இன்னும் கைது செய்யப் படவில்லை/தேடப்பட்டுவருகிறார் என்பது அதிர்ச்சி தரும் தகவல்.