உதயகுமாருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை!

uthyaya2007ம் ஆண்டு தேச நிந்தனைக் அறிக்கைகளை வெளியிட்டதற்காக ஹிண்டராப் என்ற இந்து உரிமை நடவடிக்கைக் குழுவின் மூத்த தலைவர் பி உதயகுமாருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு நவம்பர் 15க்கும் டிசம்பர் 8க்கும் இடையில் அரசாங்க ஏற்பாட்டில் சமூக ‘ஒன ஒழிப்பு’
நடவடிக்கைகள் நிகழ்ந்ததாக அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுனுக்கு எழுதிய கடிதத்தில் உதயகுமார் குறிப்பிட்டிருந்ததின் மூலம் தேச நிந்தனைக் கருத்துக்களை வெளியிட்டிருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இப்போது இயங்காத Police Watch இணையத் தளத்திலும் அந்தக் கடிதம் சேர்க்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சூழ்நிலைகள் தம்மை தொடருவதற்கு அனுமதிக்கவில்லை எனக் காரணம் கூறி தமது
வாதத் தொகுப்பை வழங்குவதற்கு உதயகுமார் கடந்த திங்கட்கிழமை மறுத்து விட்டார். அவர் இன்று
காலை வாதத் தொகுப்பை வழங்கவும் மறுத்து விட்டார்.

கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அகமட் ஸாம்ஸானி முகமட் ஜைன் முன்னிலையில்
நடைபெற்றது. அரசு தரப்பு தொடுத்த வழக்கில் நியாயமான சந்தேகத்தை எழுப்புவதற்கு உதயகுமார்
தவறி விட்டதாக அவர் தமது தீர்ப்பில் சொன்னார்.

தீர்ப்பும் தண்டனையும் வழங்கப்பட்ட போது உதயகுமார் மன உறுதியுடன் காணப்பட்டார். நீதிமன்றம்
ஒத்தி வைக்கப்பட்ட பின்னர் தமது ஆதரவாளர்களை நோக்கி அவர் புன்னகை செய்தார்.

இன்று உதயகுமாருடைய இளைய சகோதரரும் மலேசிய ஹிண்ட்ராப் சங்கத்துக்கு தலைமை
தாங்குகின்றவருமான பி வேதமூர்த்தி செனட்டராக பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.

வேதமூர்த்தியை கடந்த மாதம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பிரதமர் துறை துணை அமைச்சராக
நியமித்தார்.

தீர்ப்புக்கு எதிராக முறையீடு செய்து கொள்ளுமாறு தமக்கு உத்தரவு ஏதும் கிடைக்கவில்லை என
உதயகுமாருடைய வழக்குரைஞரான எம் மனோகரன் பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

தண்டனைக் காலம் இன்று முதல் தொடங்கியது. உதயகுமார் காஜாங் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார்.

 

TAGS: