போலீஸ் தடுப்புக் காவல் மரணங்களை ஆராய பணிக்குழு

EAICEAIC என்ற அமலாக்க நிறுவன நேர்மை ஆணையம் தனது அமைப்புச் சட்டத்தின் நான்காவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி போலீஸ் கைதிகள் சம்பந்தப்பட்ட இரண்டு தடுப்புக் காவல் மரணங்களை ஆய்வு செய்யும்.

“பொது நலனைக் கருத்தில் கொண்டு 2008ம் ஆண்டுக்கான EAIC சட்டத்தின் 28வது பிரிவின் கீழ்  இரண்டு வழக்குகள் மீது ஆய்வு தொடங்கப்படும்,” என அந்த ஆணைய தலைமை நிர்வாகி நோர் அபிஸா ஹானும் மொக்தார் கூறினார்.

EAIC1எழுவர் கொண்ட அந்தப் பணிக்குழு ஜுன் 11ம் தேதி கூடி மே 21ல் மரணமடைந்த என் தர்மேந்திரன்,  மே 26ல் மரணமடைந்த ஆர் ஜமேஷ் ரமேஷ் ஆகியோர் சம்பந்தப்பட்ட சம்பவங்களை பரிசீலிக்கும் என அவர் இன்று புத்ராஜெயாவில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

அந்தப் பணிக்குழுவுக்கு EAIC தலைவர் ஹெலிலா முகமட் யூசோப் தலைமை தாங்குவார்.

EAIC உறுப்பினர்களாக உள்ள எழுவரை மட்டும் கொண்ட அந்தக் குழு உறுப்பினர் எண்ணிக்கை  பின்னர் தேவைப்படும் போது அதிகரிக்கப்படும் என்றும் நோர் அபிஸா சொன்னார்.

சுயேச்சை ஆலோசகர்களாக சட்ட நிபுணர்களையும் விசாரணை நிபுணர்களையும் பயன்படுத்திக்  கொள்ள வேண்டியிருக்கும் என்பதே அதற்குக் காரணமாகும்.