உதயா ஒரே குற்றத்துக்காக இரண்டு முறை ஜெயிலில் அடைக்கப்படுகிறாரா ?

tian chuaஹிண்ட்ராப் தலைவர் பி உதயகுமார் ஒரே குற்றத்துக்காக இரண்டு முறை ஜெயிலில்  அடைக்கப்படுகிறாரா என்ற கேள்வியை பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா எழுப்பியுள்ளார்.

உதயகுமார் தேச நிந்தனைக் குற்றத்தைப் புரிந்துள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டு புதன்கிழமை இரண்டரை ஆண்டுகள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

அவர் 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் (இசா)கீழ் 514 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை சுவா சுட்டிக் காட்டினார்.

அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுனுக்கு உதயகுமார் கடிதம் எழுதிய பின்னர் அவர் இசா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டதாக சுவா சொன்னார். தேச நிந்தனைக் குற்றச்சாட்டுக்கான
அடிப்படை அந்தக் கடிதமாகும்.

“உதயகுமார் தேச நிந்தனை நடவடிக்கைக்காக இசா-வின் கீழ் இரண்டு ஆண்டுகள் சிறைவாசம்
அனுபவித்துள்ளார். ஒரே குற்றத்துக்காக அவர் இரண்டு முறை தண்டிக்கப்படுகிறாரா ?” என சுவா
இன்று விடுத்த ஒர் அறிக்கையில் வினவினார்.

அதே நேரத்தில் ஹிண்ட்ராப்புக்கு தெற்கு ஆசியாவில் உள்ள பயங்கரவாதக் கும்பல்களுடன் தொடர்பு
இருப்பதாக போலீஸும் அரசாங்கமும் கூறிக் கொண்டன. அத்துடன் அரசாங்கத்துக்கு எதிராகப் புரட்சி
செய்யுமாறு இந்திய சமூகத்தை ஹிண்ட்ராப் தூண்டுவதாகவும் அவை சொல்லிக் கொண்டன. அந்த இரு
கூற்றுக்களும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவே இல்லை.tian chua1

உதயகுமார் சிறையில் அடைக்கப்பட்ட செய்தி தமக்கு ‘மிகவும் வருத்தத்தை’ அளித்ததாகவும் சுவா  சொன்னார்.

“நாங்கள் அவருடன் முழுமையாக ஒத்துப் போகவில்லை என்றாலும் வழங்கப்பட்ட தண்டனை
கடுமையானது. தேர்ந்தெடுக்கப்பட்ட தன்மையைக் கொண்டதாகும்.”

1948ம் ஆண்டுக்கான தேச நிந்தனைச் சட்டத்தை அகற்றுவதாக அளித்த வாக்குறுதியை பிரதமர் நஜிப்  அப்துல் ரசாக் நிறைவேற்றவில்லை என்றும் சுவா குற்றம் சாட்டினார்.

எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதற்கு அந்தச் சட்டத்தை நஜிப் பயன்படுத்துவதையும் அவர் கண்டித்தார்.

பத்து எம்பி-யுமான அவரும் அண்மைய மாதங்களில் இரண்டு தேச நிந்தனைக் குற்றச்சாட்டுக்களை
எதிர்நோக்கியுள்ளார். சுலு பயங்கரவாதிகள் மேற்கொண்ட லஹாட் டத்து ஊடுருவல் குறித்து அவர்
தெரிவித்த கருத்துக்கள் சம்பந்தப்பட்டது முதலாவதாகும். இரண்டாவது மே 13 மீது கருத்தரங்கு ஒன்றில்
அவர் சொன்ன கருத்து சம்பந்தப்பட்டதாகும்.

 

TAGS: