தமது சகோதரர் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும் என வேதா சொல்கிறார்

waythaபுதிதாக பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டுள்ள துணை அமைச்சர் பி வேதமூர்த்தி, தமது மூத்த சகோதரர் பி உதயகுமார், தேச நிந்தனைக் குற்றச்சாட்டுக்காக எதிர்வாதம் செய்யுமாறு அழைக்கப்படாமல் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

ஆகவே உதயகுமார் ‘நல்ல வாய்ப்புக்கள்’ இருப்பதால் கதவுகள் திறந்திருக்கும் போது அந்த 30 மாதத்  தண்டனைக்கு எதிராக முறையீடு செய்து கொள்ள வேண்டும் என மலேசிய ஹிண்ட்ராப் சங்கத்  தலைவருமான வேதமூர்த்தி கேட்டுக் கொண்டார்.

பிரிட்டிஷ் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தமது சகோதரர் ‘கடுமையான வார்த்தைகளை’
பயன்படுத்தியிருக்கலாம் எனக் குறிப்பிட்ட வேதமூர்த்தி அந்தத் தீர்ப்பு மீது ‘அதிர்ச்சியும் வருத்தமும்’ அடைந்துள்ளதாக சொன்னார்.

ஆனால் அவை தேச நிந்தனைக்கு  ஒப்பாகாது என வழக்குரைஞருமான அந்த செனட்டர் கூறினார்.

புதன் கிழமை வேதமூர்த்தி பிரதமர் துறையில் துணை அமைச்சராக பொறுப்பேற்கும் பொருட்டு  செனட்டராக பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்ட பின்னர் சில மணி நேரங்களில் உதயகுமாருக்குத்  தண்டனை விதிக்கப்பட்டது.

மலேசியாவில் உள்ள ஏழை இந்தியர்கள் அரசாங்க ஆதரவில் சமூக ‘இன அழிப்புக்கு’ இலக்காகி இருப்பதாக கூறிக் கொண்டதின் மூலம் தேச நிந்தனைக் கருத்துக்களை வெளியிட்டதில் குற்றவாளி என  உதயகுமார் தீர்ப்பளிக்கப்பட்டார்.

தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னர் தமது சகோதரருடைய நிலைமை குறித்து கினிடிவி எழுப்பிய கேள்விக்கு வேதமூர்த்தி பதில் அளிக்காமல் புறப்பட்டு சென்று விட்டார்.

ஆனால் அவர் இன்று அந்த விவகாரம் மீது ஒர் அறிக்கையை வெளியிட்டு தமது மௌனத்தைக்
கலைத்துள்ளார். அந்த நேரத்தில் இருந்த சூழ்நிலையில் அத்தகைய ‘கடுமையான வார்த்தைகளை’
உதயகுமார் பயன்படுத்தியது ‘புரிந்து கொள்ளத்தக்கது’ என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

“அந்த நேரத்தில் பாடாங் ஜாவா இந்து கோவிலை சிலாங்கூர் அரசாங்கம் இரண்டாவது முறையாக
இடித்த நாளன்று அந்தக் கடிதம் எழுதப்பட்டதால் அதனை புரிந்து கொள்ள வேண்டும்.”

“இயற்கையாக 2007ம் ஆண்டு ஹிண்ட்ராப் சட்ட ஆலோசகர் என்ற முறையில் அந்தக் கடிதத்தை எழுதிய உதயகுமார் பிஎன் வழி நடத்திய பிஎன் அரசாங்கம் மீது ஆத்திரமடைந்திருந்தார்,” என வேதமூர்த்தி குறிப்பிட்டார்.

‘உதயா நல்ல திறமைகளைக் கொண்ட மனிதர்’

உதயகுமார் ‘சிறைச்சாலைக்கு வெளியில் இருந்து தமது கட்சியை வழி நடத்தவும் ஹிண்ட்ராப்புடன் தாம்  பகிர்ந்து கொண்டுள்ள பொதுவான போராட்டத்தைத் தொடரவும் முடியும் சுவர்களுக்குள் அல்ல,”  என்றும் வேதமூர்த்தி சொன்னார்.

“உதயகுமார் நல்ல திறமைகளைக் கொண்டவர். விடாமல் முயற்சி செய்கின்றவர். சிறைச்சாலைக்குள்  அவர் சிறந்த முறையில் பணியாற்ற முடியாது,” என்றார் அவர்.

லண்டனிலிருந்து வேதமூர்த்தி திரும்பிய பின்னர் சகோதரர்கள் பிரிந்தனர். வேதமூர்த்தி அரசாங்கத்துடன் புரிந்துணர்வுப் பத்திரத்தில் கையெழுத்திட்டதுடன் அந்த இயக்கத்தை Persatuan Hindraf Malaysia என்றும் பதிவு செய்து கொண்டார். அதற்கு அவர் தலைவராக இருக்கிறார்.

உதயகுமார் தலைமைச் செயலாளராக இருக்கும் மனித உரிமைக் கட்சி,  ஒர் அரசியல் கட்சியாக பதிவு பெற முடியவில்லை.

தாங்கள் பிரிந்துள்ள போதிலும் இருவரும் ‘மனித உரிமை உணர்வுகளையும்’ ‘ஒரே இலட்சியத்தையும் பகிர்ந்து கொள்வதாக’ வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் பின்பற்றும் வழிகளில் மாறுபட்டுள்ளோம். ஆனால் இருவரும் ஒரே நோக்கத்துக்காகப்
போராடுகிறோம். ஆகவே உதயகுமார் வெளியில் வந்து மனித உரிமைக் கட்சி வழி தமது முயற்சிகளைத் தொடருவதைக் காண நான் விரும்புகிறேன்,” என்றார் அவர்.

TAGS: