‘உதயாவைத் தண்டித்து மற்றவர்களை மன்னித்தது ஏன்?’

udayaஉங்கள் கருத்து ‘உதயா, இண்ட்ராப்-பின் சட்ட ஆலோசகர் என்ற முறையில் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் புரவுனுக்கு அனுப்பட்ட கடிதத்தில் கையொப்பம் இட்டிருந்தார். இண்ட்ராப் தலைமைத்துவத்தின் ஒப்புதலுடன்தான் அவர் அதைச் செய்தார்’

அண்ணனை விடுவித்திருக்க வேண்டும் என்கிறார் வேதா

பிஆர்: சில நாள்களுக்கு முன்பு, பிரிட்டிஷ் நீதிமன்றம், காலனித்துவ காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியில் சித்திரவதைக்கு ஆளான கென்யா நாட்டு மக்களுக்கு இழப்பீடு வழங்குமாறு தீர்ப்பளித்தது.

அதைத்தானே உதயாவும் செய்தார். மலேசியாவில் காடுகளைத் திருத்தி விளைநிலமாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாவிட்டாலோ (மலேரியா) நோயாளிகளாக படுத்துவிட்டாலோ அடித்து உதைக்கப்பட்ட சம்பவங்களை எடுத்துரைத்து இழப்பீடு கேட்டார் உதயா.

உண்மையைச் சொல்வது தேச நிந்தனை அல்லவே. உதயாவைத் தண்டித்திருக்கக் கூடாது.

ஜிஜிஜி: உதயா, இண்ட்ராப்-பின் சட்ட ஆலோசகர் என்ற முறையில் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் புரவுனுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் கையொப்பம் இட்டிருந்தார். இண்ட்ராப் தலைமைத்துவத்தின் ஒப்புதலுடன்தான் அவர் அதைச் செய்தார். அப்படி இருக்க, உதயாவை மட்டும் தண்டித்து மற்றவர்களை விட்டு விட்டது ஏன்?

சூடான கொங்: உதயாவை விடுவிப்பது ஒரு புறம் இருக்கட்டும், உதயாமீது வழக்கு தொடுத்த அரசாங்கம் அவரின் இளவல் பி.வேதமூர்த்தியை விட்டுவிட்டது ஏன்?

துணை அமைச்சர் வேதா பிஎன்னை ஆதரிக்கிறார், உதயா பிஎன்னை எதிர்க்கிறார்-அதனால்தான் அவரை விட்டுவிட்டு இவர்மீது மட்டும் நடவடிக்கையா?

பெர்ன்ஸ்: அரசாங்கத் துறையில் 90 விழுக்காட்டினர் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதைத்தான் திட்டமிட்ட இனஒழிப்பு என்பது. இதைக் குறிப்பதற்குத்தான் “இனஒழிப்பு” என்ற சொல்லைப் பயன்படுத்தினார் உதயா.

எனவே, மெஜிஸ்ட்ரேட் போஸ்னியா-ஹெசகோவினாவை மேற்கோள் காட்டி மலேசியாவில் இனஒழிப்பு இல்லை என்று கூறியது தவறு.

பெயரிலி $&@?: முதலில் துணை அமைச்சர் வேதமூர்த்தி , பகைவருடன் கைகோத்து இண்ட்ராபின் கொள்கைகளுக்கும் தம் தமையனுக்கும் துரோகமிழைத்தார். இப்போது செய்த துரோகத்துக்குப் பரிகாரமாக தீர்ப்புக்கு எதிராக முறையீடு செய்யுமாறு வேண்டிக்கொள்கிறார்.

ஐயா, நியாமற்ற, ஊழல்மிக்க அரசை எதிர்த்து கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கும் உதயாவுக்கு பலரும் வீர வணக்கம் செலுத்துகிறார்கள்.

பெயரிலி _3e86: எதற்காக ஐயா முறையீடு செய்வது. முதலில், உதயா, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றம் சாட்டப்பட்டிருக்கவே கூடாது.

கொள்கைப் பற்றுடன் உள்ள உதயாவை மக்கள் மதிக்கிறார்கள்.

தலைவெட்டி: வேதா, நீங்கள் உதயாவுக்கு ஆதரவாக பேசுவதாக இருந்தால், நீங்கள் கொள்கைவாதி என்பதைக் காண்பிக்க  விரும்பினால் அமைச்சர் பதவியைத் துறக்க வேண்டும்.  அதைச் செய்ய மாட்டீர்களே.

TAGS: