நடப்பு ஆண்டில் மெட்ரிக்குலேசன் படிப்பிற்கு விண்ணப்பம் செய்து இடம் கிடைக்காமல் இருக்கும் மாணவர்கள் சம்பந்தமாக எதிர்வரும் திங்கள்கிழமை (10.6.2013) காலை மணி 11.30 க்கு புத்ரா ஜெயா பிரதமர் அலுவலகம் முன் ஓர் அமைதிக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் குறித்து பிரதமர் நஜிப் ரசாக்கை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி அமைச்சர் சுப்பிரமணியத்தை கேட்டுக் கொண்டுள்ளோம் என்று ஏற்பாட்டாளர் ஆ. திருவேங்கடம் கூறுகிறார்.
ஹிண்ட்ராப்புடன் அரசு செய்து கொண்ட 7..5% மெட்ரிக்குலேசன் இட ஒதுக்கீடு ஒப்பந்தப்படி நமக்கு 2100 இடங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை பிரதமரிடம் நினைவு கூறுவோம் என்றாரவர்.
மெட்ரிக்குலேசன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்க வேண்டுமென ஏற்பாட்டாளரான அவர் கேட்டுக்கொண்டார்.
மாணவர்கள் பெற்றோர் துணையுடன் வரவேண்டும். மெட்ரிக்குலேசன் விண்ணப்பம் செய்த நகல் படிவம், SPM முடிவு நகல் ஆகியவற்றை உடன் கொண்டு வர வேண்டும். மெரிட் புள்ளி 90 எடுத்த மாணவர்களுக்கும் இடம் கிடைக்கவில்லை என்பது கொடுமை.
சென்ற ஆண்டு 1500 இடங்கள் வழங்கப் படவில்லை என்பதற்கு நம்மிடம் ஆதரங்கள் உள்ளன.இந்த முயற்சி வெற்றி பெற்றால் இன்னும் பல நூறு மாணவர்கள் பயனடைவர் என்பது திண்ணம். தொடர்புக்கு ஆ.திருவேங்கடம் 017 6470906.
உண்மையைச் சொன்னால் ம.இ.கா.வினர் இந்நேரம் இதற்கு ஒரு முடிவு கண்டிருக்க வேண்டும். சென்ற ஆண்டு 1500 இடம் கிடைத்து விட்டதாக “ஆகா ஓகோ” என்று ஆர்ப்பரித்தார்கள். இப்போது நமக்கு ஒரு துணைக் கல்வி அமைச்சரே இருக்கிறார். இந்தப் பிரச்னைக்கு இவர் இந்நேரம் ஒரு முடிவு கண்டிருக்க வேண்டும்.இவரும் “தெருக்கல்லாக” வே இருக்கப் போகிறாரா?
எவண்டா இவனுங்க mic நம்பி கிட்டு இருக்கணுங்க அவன்னுங்க்களே டக் BOLEH PAKAI போங்கடா
நல்ல முயற்சி தொடருங்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் போராடி பெறவேண்டி உள்ளதை நினைத்தால் வருத்தமாக உள்ளது.
என் மகள் தகுதி இருந்தும் கிட்டைகவில்லை
ஐயா திருவேங்கடம், ம.இ.கா.தலைவர்களும் , புதிய சிறப்பு துணை அமைச்சர் வேதாவும் மெற்றி குலேசன் மாணவர் சேர்க்கையில் வெற்றிப் பெற்று விட்டதாக கொக்கரிக்கும் வேளையில் நீங்கள் எதற்க்காக அமைதி கூட்டம் செல்ல வேண்டும்?
தெருக்கல்லாக இருந்தாலும் செற்றையோ சாணியியோ பூசலாம் . இது கிணற்றில்போட்ட கல் !
டாக்டர் சுப்ரமணியம் இடம் சொல்வதை விட்டுவிட்டு பிரதமர் துறை துணை அமைச்சர் மாண்புமிகு வேதா இடம் இந்த பிரச்சனையை கொண்டு செல்லுங்கள் காரியம் நடக்கும் .
எத்தனி பேரு மைக காரங்க வந்தாலும் நமது நிலைமை மாறாது…
ம.இ.க. இருந்தால் என்ன? இறந்தால் என்ன? இந்தியர்களை திட்டமிட்டு ஏமாற்றிக் கொண்டும் இருக்கும் இந்த கட்சி தலையிலிருந்து வால் வரை உரு மாற்றம் காண வேண்டும். இல்லையேல், பயன் இல்லை.
எதற்கெடுத்தாலும் ம.இ.கா, ம.இ.கா தானா? ம.இ.கா வால் ஒரு ஆணியைக் கூட புடுங்க முடியாது என்று தெரிந்துவிட்டதே, அப்புறம் ஏன் இன்னும் ம.இ.கா புராணம்? அரசு சாரா அமைப்புக்கள் வழி புதியதோர் அரசியல் களம் காண ஆவன செய்வோம். நமது பலததைக் காட்டுவோம்.
இந்தியர் நலம் காக்கும் துணை அமைச்சர் வேதமூர்த்தியும் துணை கல்வி அமைச்சர் கமலநாதனும் இந்த பிரச்சனையை எதிர்கொண்டு தீர்வு காண முயற்சி எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம் அல்லது படஹ்வி முஹம கொண்டு போதிவர்மர் சொன்னது போல குத்து கல்லை போல் மௌனம் சாதித்து கண்டு கொள்ளாமல் போவார்களா ?
ஏன் இன்னும் இந்த போராட்டம் ? 1500 இடங்களை நிரப்ப அரசாங்கன் உத்திரவாதம் அளித்த போதிலும் இன்னும் இந்திய மாணவர்கள் புரகநிக்கின்றனர். ம. இ . கா இதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இல்லையேல் எதிர் காலத்தில் இன்னும் மோசமான அடைவு நிலையை அடையும் என்பது திண்ணம். ஐயா வேதமூர்த்தி என்ன செய்கிறார். ?
பாராட்டுக்கள்…சார்…நம் தலைவர்கள் செய்ய வேண்டியதை …நம் மாணவர்களுக்காக நீங்கள் செய்கின்றிர்கள்….உங்கள் முயற்சி வெற்றி அடைய எனது வாழ்த்துக்கள்.இறைவன் உங்களுக்கு துணையாக இருக்க வேண்டிக்கொள்கிறேன்…
அய்யா போதிவர்மா உமக்கு குறைச் சொல்வதைவிட வேறு வேலையே இல்லையா? உயர்திரு திருவெங்கடம் தன்னால் ஆன சிறப்பான செயல்களைச் செய்துகொண்டிருக்கின்றார். அவரைப் பராட்டாமல் ம.இ.கா-வைக் குறைச் சொல்ல புறப்பட்டு விட்டீர். இது ஞாயமா? தயவு செய்து புறம் கூறுவதை விடுத்து அய்யாஅ திருவெங்க்கடம் ஆற்றும் தன்னலமற்ற சேவையினைப் போற்றுவோம். தோள் கொடுப்போம்.