‘தேர்தல் ஆணையம் செய்த வேலையை ஏய்ப்பு எனச் சொல்வது மிக சாதாரண வார்த்தை’

BNஉங்கள் கருத்து : “20 விழுக்காடு வாக்காளர்களைக் கொண்டு பிஎன் 112 இடங்களை  வென்றிருக்குமானால் அவர்கள் அதனை ‘முதலில் கம்பத்தைத் தொடுகின்றவர்’ என  எப்படி அழைத்தாலும் அது ஜனநாயகமல்ல. அது குற்றமாகும்”

பிஎன் கடந்த தேர்தலில் சிறிய தொகுதிகளிலேயே பெரும்பாலும் வெற்றி பெற்றது

முஷிரோ: ஆகவே மொத்த வாக்குகளில் 20 விழுக்காட்டைக் கொண்டு பிஎன் 112  இடங்களை வென்றது. அது அப்பட்டமான தில்லுமுல்லு, மோசடி.

பிஎன் அந்தத் தொகுதிகளில் கவனம் செலுத்த முடியும். அந்தத் தொகுதிகளில்  பக்காத்தான் ராக்யாட் ஆதரவாளர்கள் நுழைவதையும் அது தடுக்க முடியும். பெல்டா, சபா சரவாக் கிராமப்பகுதிகள் ஆகியவற்றை அதற்கு எடுத்துக் காட்டாக  கூறலாம்.

இஸானா: 100 விழுக்காட்டினருக்கு 20 விழுக்காடு வாக்காளர்கள் முடிவு செய்ய  இயலும் என்றால் பெரும்பாலான போலியான ஜனநாயகங்கள் அப்படித் தான்  இயங்குகின்றன. அந்த மோசடியில் பிஎன் திறமை வாய்ந்தது.

விஷமத்தனமான ஆனால் திறமையான பிஎன் ‘உறுப்புக் கட்சியான’ – தேர்தல்  ஆணையத்துக்கு அதற்காக நன்றி கூற வேண்டும். 10 விழுக்காடு ஆதரவுடன்  கூட பிஎன் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும்.

அந்தத் தேர்தல் முறை அமலில் இருக்கும் வரை மலேசியாவில் மாற்றம் ஏற்படாது.

கலா: மொத்த வாக்குகளில் 20 விழுக்காட்டை மட்டுமே பெற்று 112 இடங்களை  பிஎன் கூட்டணி பெற்றுள்ளது உண்மை என்றால் நாடாளுமன்றத்தில் அது நிச்சயம்  பெரும் சர்ச்சையை கிளப்புவது திண்ணம்.

ஏதோ பெரிய கோளாறு உள்ளது. தேர்தல் தொகுதி எல்லைகளில் நிர்ணயம்  செய்வதில் காணப்படுகின்ற இந்த குழப்பமான நேர்மையற்ற வழி முறைகள் பற்றி  தேர்தல் ஆணையம் விளக்க வேண்டிய அவசியம் உள்ளது.

தேர்தல் ஆணையம் செய்த வேலையை ஏய்ப்பு எனச் சொல்வது மிக சாதாரண  வார்த்தை.

போர்தான்: 20 விழுக்காடு வாக்காளர்களைக் கொண்டு பிஎன் 112 இடங்களை  வென்றிருக்குமானால் அவர்கள் அதனை ‘முதலில் கம்பத்தைத் தொடுகின்றவர்’ என  எப்படி அழைத்தாலும் எனக்குக் கவலை இல்லை. அது ஜனநாயகமல்ல. அது  குற்றமாகும்.

மேற்கத்திய ஜனநாயகத் தரத்தை அடிப்படையாகக் கொண்டால் பக்காத்தான்  மகத்தான வெற்றி பெற்றிருக்க வேண்டும். மலேசிய மக்களுக்கு எதிராக  இழைக்கப்பட்டுள்ள அந்தக் குற்றத்தை என்னால் நம்ப முடியவில்லை. இருந்தும்  சட்ட விரோத அரசாங்கம் அது குறித்து பெருமை அடித்துக் கொள்கிறது.

தே தாரேக்: “1973க்கு முன்னதாக தொகுதிகளுக்கு இடையிலான அளவு வேறுபாடு  33 விழுக்காட்டுக்குள் இருக்க வேண்டும் என அரசமைப்பு நிர்ணயம்  செய்திருந்தது. மெர்தேக்காவுக்கு முன்பு அந்த வேறுபாடு 15 விழுக்காட்டுக்கு மேல்  போகவில்லை,” என அந்தச் செய்தி தெரிவித்துள்ள மிக முக்கியமான தகவலாகும்.

தேர்தல் ஆணையம் எப்படி அந்த 15 முதல் 33 விழுக்காடு வரம்பை மீறியுள்ளதைக் கவனியுங்கள். இப்போது புத்ராஜெயாவுக்கும் (மிகச் சிறிய தொகுதி)  காப்பார் தொகுதிக்கும் (மிகப் பெரிய தொகுதி) இடையிலான வேறுபாடு 900  விழுக்காடு. ஆகவே தேர்தல் ஆணையம் நம் நாட்டை தோற்றுவித்தவர்கள் வைத்த  நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டது.

எஸ்ஆர்மன்: அம்னோ தலைவர் ஒருவர் அம்னோ வெற்றி பெற்ற 88 தொகுதிகளையும் பக்காத்தான் பெற்ற 89 இடங்களையும் ஒப்பீடு செய்து பெருமை  அடித்துக் கொண்டுள்ளார்.

ஆனால் அவர் அந்தக் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் எண்ணிக்கையைப்  பற்றி எதுவும் சொல்லவே இல்லை. அம்னோ எப்படி பெரும்பான்மையான  இடங்களை வென்றது நமக்கு இப்போது தான் தெரிகிறது.

மூங்கில்: அந்த ‘CIMB’ (கம்போடிய, இந்தோனிசிய, மியன்மார், வங்காள தேசி)  வாக்குகளை கழித்து விட்டால் பிஎன் -னுக்கு மொத்தம் செலுத்தப்பட்ட  வாக்குகளில் 20 விழுக்காட்டுக்கும் குறைவாகத் தான் கிடைத்திருக்க வேண்டும்.  ஆகவே அம்னோபாரு தலைவர்கள் பாதுகாப்பற்ற உணர்வைப் பெற்றிருப்பதில்  வியப்பில்லை. அதனால் அண்மைய காலமாக பழைய இனவாத விளையாட்டை
மீண்டும் மீண்டும் ஆடுகின்றனர்.

உண்மையில் பிஎன் சிறுபான்மை அரசாங்கம். சில மலேசியர்களே பிஎன் -னை  ஆதரித்துள்ளனர். அவர்களில் சபா, சரவாக் மக்களும் தகவல் அறியாத தீவகற்ப  மலேசியர்களும் அடங்குவர்.

ஜேடிசி: அம்னோ தேர்தல்களைத் திருடியது இப்படித் தானா ?

அடையாளம் இல்லாதவன்#88188: அடக்கடவுளே, சாதாரண பெரும்பான்மையுடன்  ( 20 விழுக்காடு வாக்குகளுடன்) ஒரு கூட்டணி நாட்டை ஆள முடிந்துள்ளது.  உண்மையில் அது பெரிய குளறுபடி தான். போலியான ஜனநாயகம். SPR என்றால்  Suruhanjaya Penipu Rakyat ? எனச் சொல்லலாமா ?

TAGS: