லிம் குவான் எங்: பக்காத்தான் எல்லா வாக்காளர்களையும் நியாயமாக நடத்துகின்றது. பிஎன் ஏன் அவ்வாறு செய்யக் கூடாது ?

Limபிஎன் தனது ஆதரவாளர்களுக்குச் சேவை செய்யவே விரும்புகின்றது.  எதிர்ப்பாளர்களுக்கு அல்ல எனக் கூறியுள்ள துணைப் பிரதமர் முஹைடின்  யாசினை டிஏபி சாடியுள்ளது.

எல்லா வாக்காளர்களையும் நியாயமாக நடத்தும் பக்காத்தான் மாநிலங்களை பிஎன்  பின்பற்ற வேண்டும் என அதன் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்  கூறினார்.

“பக்காத்தான் கட்சிகள் தாங்கள் ஆளும் மாநிலங்களில் அனைவரையும் நியாயமாக  நடத்துகின்றன. மலேசியரைப் போன்று ஏன் பிஎன் இயங்கக் கூடாது ? அரசியல்  ரீதியில் பழி வாங்கி பாகுபாடு காட்டும் மோசமான மனிதரைப் போல ஏன் நடந்து  கொள்ள வேண்டும் ? ” என அவர் கூச்சிங்கில் சரவாக் மாநில டிஏபி சாதாரண  மாநாட்டில் உரையாற்றிய போது கூறினார்.

பக்காத்தானை ஆதரித்தவர்களை குறிப்பாக சீனர் சமூகத்தைத் தண்டிக்கப்  போவதாக துணைப் பிரதமர் சொல்லிக் கொண்டிருக்கிறார்.”

“அது ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்குகிறது. சுதந்திரமாக தேர்வு செய்ததற்காக  மக்களைத் தண்டிக்கக் கூடாது.”

கடந்த பொதுத் தேர்தலில் பிஎன் -னை ஆதரித்த சமூகப் பிரிவுகளுக்கு அரசாங்கம்  மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் என முஹைடின் சொன்னதாக பெர்னாமா  நேற்று வெளியிட்ட தகவல் குறித்து லிம் கருத்துரைத்தார்.

மூவார் குண்டாங் உலுவில் பிஎன் நடத்திய நன்றி தெரிவிக்கும் விருந்தில் பேசிய  முஹைடின் தமது மேலோட்டமாக விடுத்த செய்தியில் சீன சமூகத்தை  குறிப்பிடவில்லை.

“மலாய்க்காரர்கள், இந்தியர்கள், பூமிபுத்ராக்கள், ஒராங் அஸ்லிக்கள், சயாமிய  சமூகம், சபா, சரவாக் மக்கள் ஆகியோரில் பெரும்பாலோர் இன்னும் பிஎன் -னை  ஆதரிப்பது தெளிவாகத் தெரிகிறது.”

“நாங்கள் அவர்களுக்கு கூடுதல் உதவியை வழங்குவோம். நாங்கள் அதனைச்  செய்வோம்,” என முஹைடின் சொன்னதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

TAGS: