‘முஹைடின் அவர்களே, அப்படி என்றால் சீனர்கள் வரிகளைச் செலுத்த வேண்டாம்’

UMNO-muhyiddinஉங்கள் கருத்து : “அவர் சொல்லும் நியாயத்தையே எடுத்துக் கொள்வோம். எதிர்க்கட்சிகளுக்கு  வாக்களித்தவர்கள் வரிகளைச் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. அவர்  வரிகளை வசூலிக்க விரும்பினால் அவர் சேவைகளை வழங்குவது சட்டப்பூர்வமானதாகும்.”

லிம் குவான் எங்: பக்காத்தான் எல்லா வாக்காளர்களையும் நியாயமாக  நடத்துகின்றது. பிஎன் -னும் ஏன் அவ்வாறு செய்யக் கூடாது ?

தூனார்மி: எல்லா மலேசியர்களும் வரி செலுத்துகின்றனர். துணைப் பிரதமர்  முஹைடின் யாசின் தமது வாயைத் திறப்பதற்கு முன்னர் அதனைச் சிந்திக்க  வேண்டும்.

அவர் எல்லா மலேசியர்களுக்கும் துணைப் பிரதமராக இருக்க விரும்பவில்லையா  ? 51 விழுக்காடு மலேசியர்கள் அவரை விரும்பவில்லை என்பதை அவர்  நினைவில் கொள்ள வேண்டும்.

காரணம்: சீனர்கள் டிஏபி-க்கும் பாஸ் கட்சிக்கும் பிகேஆர் கட்சிக்கும் கூட  வாக்களித்துள்ளனர். ஆகவே அவர்கள் அந்தக் கட்சிகளிடம் உதவிக்குச்  செல்லட்டும். பிஎன் மலேசியாவை பொதுவான அடிப்படையில் ஆட்சி புரியட்டும்.  ஆனால் தனது சொந்தத் தொகுதிகளையும் தனது கட்டுக்குள் உள்ள  மாநிலங்களையும் வளப்படுத்தட்டும்.

அம்னோ ஒரு போதும் கலைக்கப்படக் கூடாது. பிஎன் -னும் ஒரே கட்சியாக  மாறக் கூடாது. அது மலாய்க்காரர்களை கவனிக்க வேண்டும். அதற்காகத் தான்  அது உருவாக்கப்பட்டது.

மலாய்க்காரர்கள் அதனை ஆதரித்தால் அவர்கள் தொடர்ந்து மலாய்க்காரர்களைக்  கவனிக்க வேண்டும். மலாய் ஆதரவைப் பெருக்க வேண்டும்.

அதே வேளையில் பக்காத்தான் ராக்யாட் என்ற கூட்டணியிடமிருந்து தங்களுக்கு  எதுவும் கிடைக்காது எனத் தெரிந்ததும் சீனர்கள் பிஎன் -னுக்கு திரும்புவர்.

பிடிஎன்: அம்னோவிடமிருந்து நீங்கள் எதனை எதிர்பார்க்க முடியும் ? எதனையும்  நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது. அப்போது நீங்கள் ஏமாற்றமும் அடைய  வேண்டியதில்லை.

வீரா: பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் அவர்களே, எல்லா வாக்காளர்களையும் பிஎன் ஏன் சமமாக நடத்த முடியாது என்பதை நாங்கள்  உங்களுக்குச் சொல்ல முடியும். ஏனெனில் அதனை சிறுபான்மையினரே  ஆதரித்துள்ளனர். அது தொடர்ந்து தில்லுமுல்லு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு  மக்கள் ஏதும் அறியாதவர்களாகவும் மூளைச் சலவை செய்யப்பட்டவர்களாகவும்  இருக்க வேண்டும்.

அடையாளம் இல்லாதவன்#40538199: அம்னோவுக்கு தான் எஜமானர் என்ற  எண்ணம் எப்போதும் உள்ளது. அது மக்களுக்கு தனது கருணை அடிப்படையில்  தர்மம் செய்கின்றது. அதனால் மக்கள் தனக்கு நன்றிக்கடன்பட்டவர்களாக இருக்க  வேண்டும் என அது சொல்கின்றது.

அது ஜனநாயகத்தை மறந்து விடுகின்றது. மக்கள் வாய்ப்பு கொடுத்ததால் அது  ஆட்சி புரிகின்றது. அது அதன் பிறப்பு உரிமை அல்ல.

பிஜான்: தனக்கு வாக்களிக்காத வாக்காளர்களை உலகில் எந்த முதிர்ச்சி அடைந்த  அரசியல் தலைவரும் தண்டிக்க மாட்டார். மாறாக அடுத்த தேர்தல் அவர்கள்  தனக்கு வாக்களிக்கச் செய்யும் பொருட்டு அவர்களுக்கு உதவ முயலுவார்.

ஸ்பின்னாட்: 14வது பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி பெற்றாலும் தோல்வி  கண்டாலும் தமக்கு சீனர் ஆதரவு எதிர்காலத்தில் கிடைக்காது என முஹைடின்  எண்ணுகிறார். அவர் பிரதமராகவும் முடியாது. அவர் துணைப் பிரதமராகவோ  அல்லது எதிர்த்தரப்பின் துணைத் தலைவராகவோ இருப்பார்.

அடையாளம் இல்லாதவன்_4196: முஹைடின் அறிக்கை அவர் அனைத்து  மலேசியர்களுக்கும் தலைவர் அல்ல என்பதைக் காட்டுகின்றது. ஜனநாயக  நடைமுறை குறித்த அவரது புரிந்துணர்வு பூஜ்யமாகும். இது போன்ற மனிதர்கள்  மலேசியாவைப் பிரதிநிதிக்க வேண்டுமா ? நிச்சயமாக இல்லை.

நீலகரி: அவர் சொல்லும் நியாயத்தையே எடுத்துக் கொள்வோம். எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தவர்கள் வரிகளைச் செலுத்த வேண்டிய கட்டாயம்  இல்லை. அவர் வரிகளை வசூலிக்க விரும்பினால் அவர் சேவைகளை வழங்குவது  சட்டப்பூர்வமானதாகும்.

TAGS: