வாக்குறுதிகளை கைவிடுங்கள் எனப் பிரதமருக்கு ஆலோசனை

najibமூன்று மாநிலங்களில் சீன உயர் கல்விக் கூடங்களை அதிகரிப்பதாகவும் தரம்  உயர்த்துவதாகவும் தாம் அளித்த எல்லா தேர்தல் வாக்குறுதிகளையும் பிரதமர்  நஜிப் அப்துல் ரசாக் கைவிட வேண்டும் என மலாய் முஸ்லிம் அரசு சாரா  அமைப்புக்கள் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

பிஎன்-னை ஆதரிப்பதாக ‘தாங்கள் அளித்த வாக்குறுதியை’ மலேசிய சீன வாக்காளர்கள்’ நிறைவேற்றாததே அதற்குக் காரணம் என அந்தக் கூட்டமைப்பு தெரிவித்தது.

najib1அந்த சமூகம் பிஎன் -னுக்கு பிளவுபடாத ஆதரவை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அந்த வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டதை Gabungan NGO  Melayu-Islam என்ற அந்த அமைப்பு சுட்டிக் காட்டியது.

“நெகிரி செம்பிலான், ஜோகூர், பினாங்கு ஆகியவற்றில் சீன உயர் கல்விக்  கூடங்களை அதிகரிப்பதாகவும் தரம் உயர்த்துவதாகவும் அளித்த எல்லா  வாக்குறுதிகளையும் கைவிடுங்கள்.”-

“பிஎன் அடைந்த வெற்றிக்கு சபா, சரவாக் வாக்காளர்கள் அளித்த வலுவான  ஆதரவு காரணமாகும். சீன வாக்காளர்கள் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை  நிறைவேற்றவில்லை. ஆகவே அவர்களுக்குக் கொடுத்த வார்த்தையை நஜிப்  காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை.”

நஜிப்பின் தேசியச் சமரச இலட்சியத்துக்கு தாய்மொழிப் பள்ளிகள் ‘தடைக்கல்லாக’  இருப்பதாகவும் மலேசிய முஸ்லிம் பயனீட்டாளர் சங்கம் தலைமையில்  இணைந்துள்ள 130 அரசு சாரா அமைப்புக்கள் கூட்டணி கூறியது.

najib2ஆகவே டோங் ஜோங் என அழைக்கப்படும் ஐக்கிய சீன பள்ளிக்கூட குழுக்கள்  சங்கத்தின் ‘மேலாதிக்க, தீவிரமான’ கோரிக்கைகளுக்கு பணிய வேண்டாம் என்றும்  அது அரசாங்கத்தை கேட்டுக் கொண்டது.

“தாய்மொழிப் பள்ளிக்கூடங்களை அதிகரிப்பதற்கான விண்ணப்பம், யூஇசி என்ற  ஐக்கிய தேர்வுச் சான்றிதழை அங்கீகரிப்பது, தாய்மொழிப் பள்ளிகளில் மண்டரின்  போதனையை வலுப்படுத்துவது போன்ற விஷயங்கள் டோங் ஜோங் -உடன்  கூட்டம் நடத்த வேண்டாம் என நாங்கள் பிரதமரையும் முதலாவது இரண்டாவது கல்வி அமைச்சர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.”

அந்த கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ள மற்ற விஷயங்கள்:

எல்லா தாய்மொழிப் பள்ளிக்கூடங்களையும் (தனியார் பள்ளிகளைத் தவிர) ரத்துச்  செய்ய வேண்டும்

கூட்டரசு அரசமைப்பு அடிப்படையில் தேசிய இலட்சியங்களுக்கும் அவாக்களுக்கும் ஏற்ப தனியார் தாய்மொழிப் பள்ளிகளில் இருப்பதை உறுதி  செய்யுங்கள்.

அனைத்துலக மொழி என்னும் முறையில் ஆங்கில மொழிப் போதனையையும்  பயனீட்டையும் அதிகரியுங்கள்.

அரபு, மண்டரின், தமிழ் மற்றும் இதர வர்த்தக மொழிகள் ஆகியவற்றை படிப்பதற்கு ஊக்க மூட்டுங்கள் அவை அனைத்தும் செய்யப்படாவிட்டால் தாய்மொழிப் பள்ளிகள் தொடர்ந்து இன ரீதியாக செயல்படுவதோடு சமூகத்தை பிளவுபடுத்தி இன ஒற்றுமைக்கு மருட்டலை  ஏற்படுத்தும் என்றும் Gabungan NGO Melayu-Islam கூறியது.

TAGS: