நாஸிர் மலாய் எதிர்ப்பாளர் அல்ல அவர் எல்லா மலேசியர்களுக்கும் பாடுபடுகிறார்

nazirஅம்னோ உட்பூசல் பெரிதாகியுள்ளது. பிரதமருடைய சகோதரர் கூட விட்டு  வைக்கப்படவில்லை. அதிகாரத் தரகர்கள் உயர் பதவிக்கு குறி வைக்கின்றனர்.  அவர்கள் முதலில் உடன் பிறப்புக்களைத் தாக்குகின்றனர்

இப்போது நாஸிர் ரசாக் மலாய் எதிர்ப்பாளர்

சக மலேசியன்: உத்துசான் மலேசியா உட்பட மலாய் வலச்சாரி அமைப்புக்களின்  நேர்மையற்ற கடுமையான தாக்குதலுக்கு இலக்கான ஏர் ஏசியா எக்ஸ் தலைமை  நிர்வாகு அஸ்ரான் ஒஸ்மான் ரானி-க்கு ஆதரவு தெரிவித்ததின் மூலம் சிஐஎம்பி  குழும் தலைமை நிர்வாக அதிகாரி நாஸி ரசாக் வர்த்தக வட்டாரத்தை பாராட்டைப்
பெற்றுள்ளார்.

தெளிவான போக்கைக் கொண்ட அஸ்ரானை நாஸிர் பாராட்டியது சரியானதாகும்.  ஆனால் நாஸிர் நடவடிக்கை எதிர்ப்பாளர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை.

கோபுரம் போல உயர்ந்துள்ள மலாய்க்காரர் ஒருவருடைய பண்புகளுக்கு எடுத்துக்  காட்டாக அஸ்ரான் திகழ்கிறார். அவர் தமது சொந்த இனம் என்னும் வலைக்குள்  சிக்கிக் கொள்ளாமல் சக மனிதர்களுடன் நியாயமாகவும் மரியாதையுடனும்  பழகுகிறார்.

கேஎஸ்என்: நாஸிர் அவர்களே அந்த விஷயத்தில் உங்கள் நிலையை நாட்டு  மக்கள் வரவேற்கின்றனர்.

தேர்தல் முடிவுகள் தொடர்பில் சீனர்களுக்கு எதிராக உத்துசான் வெளியிட்ட இன  வெறுப்பு வார்த்தைகள் குறித்து அஸ்ரான் தெரிவித்த கருத்தை நீங்கள் ஏன்  ஆதரிக்கின்றீர்கள் என்பதை மலாய் அரசு சாரா அமைப்புக்கள் புரிந்து  கொள்ளவில்லை. அல்லது புரியாதது போல நடிக்கின்றன.

உத்துசான் வெளியிட்ட கருத்து இனவாதமானது, தேவையற்றது, அஸ்ரான் உட்பட  இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு.

நாஸிர், மலேசியாவின் நன்மைக்கும் அனைத்து இன மலேசியர்களுடைய  நன்மைக்கும் முதிர்ச்சியான கருத்துக்களை வெளியிட்ட உங்களுக்கு நன்றி.
இனவாதம் பற்றிப் பேசுவதையும் பழி வாங்குவது பற்றிப் பேசுவதையும் நிறுத்திக்  கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. மக்கள் தங்கள் அரசமைப்பு  உரிமைகளை குறிப்பாக தேர்தலின் போது பயன்படுத்தி விட்டனர். அவ்வளவு  தான்.

அபாசலோம்: “நாங்கள் நாஸிருடைய அறிக்கை குறித்து மிகவும் ஏமாற்றம்  அடைந்துள்ளோம். ஆசியானில் புகழ் பெற்ற கூட்டு நிறுவனம் ஒன்றுக்கு அவர்  தலைமை தாங்கிய போதிலும் அவர் தமது சொந்த மலாய் இனத்தின்  உணர்வுகளை ஒரங்கட்டும் சிந்தனைக்குள் சிக்கிக் கொண்டுள்ளார்,” என மலேசிய  முஸ்லிம் பயனீட்டாளர் சங்கம் கூறியுள்ளது.

அத்தகைய மக்களுக்கு உள்ள சிந்தனையைப் பாருங்கள். எதிர்க்கட்சிகளுக்கு  வாக்களித்ததற்காக ஒருவரை கண்டிப்பது ? பக்காத்தான் ராக்யாட்டுக்கு  வாக்களித்ததால் அவர்கள் இனத் துரோகிகளாக மாறி விட்டார்களா ?

அஸ்ரானும் நாஸிரும் வெற்றி அடைந்துள்ளதால் ( அவர்கள் சொந்தத் தகுதியில்  வெற்றி பெற்றிருக்க வேண்டும் என நான் எண்ணுகிறேன். வேறு எதுவும் இல்லை)  அவர்கள் தங்கள் சொந்த இன மக்களை குறிப்பாக தேச நிந்தனை கட்டுரைகளை  வெளியிடும் உத்துசானைப் போன்றவற்றை ஆதரிக்க வேண்டும் எனச் சொல்வது
அபத்தமானது.

எல்விபாலா: நாஸிருடைய துணிச்சலுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் எடுத்துக்காட்டாக  விளங்கும் மலாய் தலைவர். நீங்கள் ஒர் இனத்தை பற்றி மட்டும் பேசுவதில்லை.  அனைத்து மலேசியர்களுக்கும் நீங்கள் பேசுகின்றீர்கள்.

குவிக்னோபாண்ட்: உண்மையில் ஒரே குழப்பமாக இருக்கிறது. உத்துசான்  அம்னோ தலைவருடைய உத்தரவுக்கு இணங்க செயல்படுகிறது. ஆனால்  உத்துசான் அம்னோ தலைவருடைய சகோதரர் நாஸிரைத் தாக்குகின்றது.

உண்மையில் நஜிப்புக்கு அதிகாரம் ஏதுமுள்ளதா ? அல்லது குட்டி
நெப்போலியன்கள் விருப்பம் போல செயல்படுகின்றனரா ?

வாக்காளர்: அம்னோ தேர்தலுக்கு முன்னர் மூண்டுள்ள உட்பூசலா ?

லிம் சொங் லியோங்: அம்னோ உட்பூசல் பெரிதாகியுள்ளது. பிரதமருடைய  சகோதரர் கூட விட்டு வைக்கப்படவில்லை. அதிகாரத் தரகர்கள் உயர் பதவிக்கு  குறி வைக்கின்றனர். அவர்கள் முதலில் உடன் பிறப்புக்களைத் தாக்குகின்றனர்.

நஜிப் கழுத்தை சுற்றிலும் கயிறு இறுகுகிறது. விரைவில் நடவடிக்கை தொடங்கும்.

 

 

TAGS: