மகளிர், சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் ரொஹானி கரிம், அல்டான்துன்யா வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறியதைப் பிடித்துக்கொண்ட பிகேஆர் மகளிர் பகுதி ‘என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என்பதை அமைச்சர் விளக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறது.
“சந்தேகத்துக்குரிய முக்கியமானவரே வெளியில் இருக்கிறார். அவர்தான் மலேசிய பிரதமர்”, என பிகேஆர் மகளிர் தலைவி ஸுரைடா கமருடின் கூறினார்.
இதே குற்றச்சாட்டு இதற்கு முன்னரும் பல தடவை கூறப்பட்டு அதைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் பலமுறை வன்மையாக மறுத்துள்ளார்.
இன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஸூரைடா, கோலாலும்பூரில் கடந்த வாரம் நடைமெற்ற மகளிர் மாநாட்டுக்கு வந்திருந்த மங்கோலிய பேராளர்கள் எழுப்பிய விவகாரங்களை ரொஹானி (இடம்) தள்ளுபடி செய்தார் என்றும் குற்றம் சாட்டினார்.
“அவர் கூறிய ‘அவர்கள் என்னை அணுகவில்லை’ போன்ற காரணம் ஏற்கத்தக்கதல்ல”, என்றும் அவர் சொன்னார்.
ரொஹானி மரியாதைக்காகவது மங்கோலிய தரப்பினர் கொடுத்த மகஜரை வாங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்றாரவர்.