ஜுன் 24ம் தேதி புதிய நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும் போது பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் சடங்கை தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டுமா இல்லையா என்பதை பிகேஆர் இன்றிரவு முடிவு செய்யும்.
“அதனை அரசியல் பிரிவு விவாதிக்கும்,” என பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் இன்று பெட்டாலிங் ஜெயாவில் நிருபர்களிடம் கூறினார்.
எம்பி-க்கள் தங்களுக்கு வாக்களித்தவர்களை மதித்து தங்கள் கடமையைச் செய்ய வேண்டும் எனத் தாம் தனிப்பட்ட முறையில் நம்புவதாக ராபிஸிக்கு முன்னர் நிருபர்களைச் சந்தித்த பிகேஆர் மகளிர் தலைவி சுராய்டா கமாருதின் சொன்னார்.
“கட்சி உறுப்பினர் என்ற முறையில் தேர்தல் மோசடிகளை மற்ற வழிகளில் ஆட்சேபிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை நான் ஆதரிக்கிறேன். ஆனால் எம்பி-க்கள் என்ற முறையில் மக்களுடைய தேர்வை நாம் மதிக்க வேண்டும்,” என்றார் அவர்.
பதவி உறுதி மொழி எடுத்துக் கொள்ளும் சடங்கு புறக்கணிக்கப்படக் கூடாது எனத் தாம் அரசியல் பிரிவுக்கு பரிந்துரைக்கப் போவதாகவும் சுராய்டா வாக்குறுதி அளித்தார்.
உன்னை ஒன்று சொல்லவென் உம்மை சொல்ல வேண்டும். உம்மை பாட சொன்ன என்ன பாட தோன்றும்.