“505 கறுப்புப் பேரணி: மெர்போக் திடலா அல்லது மெர்தேகா அரங்கமா ?

Rallyஉங்கள் கருத்து : மெர்போக் திடலை மறுப்பதின் மூலம் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம்  (டிபிகேஎல்)அரசியல் முடிவைச் செய்கின்றது. மெர்போக் திடலையோ அல்லது  மெர்தேக்கா சதுக்கத்தையோ பக்காத்தான் பயன்படுத்த அது அனுமதிக்கும்  சாத்தியம் இல்லை

505 கறுப்புப் பேரணிக்கான இடம் மீதான பேச்சுக்கள் தேக்க நிலையில்

அடையாளம் இல்லாதவன் #85701391: அரசாங்க ஊழியர்கள் இப்போது தங்கள்   அரசியல் எஜமானர்கள் கொடுக்கும் முட்டாள்தனமான அல்லது சிந்தனையில்லாத  உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாமல் பேச்சு நடத்தத் தயாராக இருக்கின்றனர்.

இது நல்ல அறிகுறி. மக்கள் வரிப் பணத்திலிருந்து தங்கள் சம்பளம் கிடைக்கின்றது  என்பதையும் அரசியல்வாதிகள் கறைபடிந்த வேலைகளைச் செய்ய தங்களை  பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதையும் அரசாங்க ஊழியர்கள் ஏற்றுக்  கொண்டுள்ளனர்.

வெறும் பேச்சு வேண்டாம்: ஒரு மணி நேரம் நீடித்த விவாதத்தின் போது மெர்போக் திடலுக்குப் பதில் மெர்தேக்கா அரங்கத்தை டிபிகேஎல் வழங்கியுள்ளதால் பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் அதனை ஏற்றுக்  கொள்ள வேண்டும்.

டிபிகேஎல் தனது எண்ணத்தை மாற்றிக் கொள்ளும் முன்னர் அவர் ஜுன் 22 505  கறுப்புப் பேரணிக்கு அதனை ஒப்புக் கொள்ள வேண்டும்.

கவனம்: ஆம், மெர்தேக்கா அரங்கம் நல்ல தேர்வாகவும் அர்த்தமுள்ளதாகவும்  அமையும். என்றாலும் டிபிகேஎல் எண்ணத்தை மாற்றிக் கொள்ளக் கூடும்  என்பதையும் போலீசார் ஜோடிக்கப்பட்ட காரணங்களுக்காக அதனை நிராகரிக்கும்  சாத்தியம் உண்டு என்பதையும் மறந்து விடக் கூடாது.

மலேசியன்: ராபிஸி நான் மெர்போக் திடல் வழியாக காரில் சென்றேன். அதில்  ஒரு மில்லியன் மக்கள் கூட முடியாது. மெர்தேக்கா அரங்கம் நல்ல தேர்வு. அது  அர்த்தம் உள்ளது. செலவுகளைப் பற்றி அஞ்ச வேண்டாம். மக்கள் நன்கொடை  அளிப்பர்.

முஷிரோ: மெர்போக் திடலை மறுப்பதின் மூலம் கோலாலம்பூர் மாநகராட்சி  மன்றம் (டிபிகேஎல்)அரசியல் முடிவைச் செய்கின்றது. மெர்போக் திடலையோ  அல்லது மெர்தேக்கா சதுக்கத்தையோ பக்காத்தான் பயன்படுத்த அது அனுமதிக்கும்  சாத்தியம் இல்லை. அவை அம்னோ அங்கீகரிக்கும் நிகழ்வுகளுக்கு மட்டுமே  கொடுக்கப்படும்.

மனிதன்: ராபிஸிக்கு பாராட்டுக்கள். இனியும் மாற்றங்கள் வேண்டாம். மலேசியாவுக்குத் திரும்ப நான் என் டிக்கெட்டை பதிவு செய்யப் போகிறேன்.  வரலாற்றுச் சிறப்புடைய அந்தப் பேரணியில் பங்கு கொள்ள நான் ஆவலாக  இருக்கிறேன்.

நியாயமான தேர்தல் : அரங்கத்தைக் காட்டிலும் சாலைகளில் ஆர்ப்பாட்டம் செய்வது  தான் பயனுள்ளது. மலேசியா நமது நாடு. நாம் விரும்பும் எந்த இடத்திலும் நாம்  கூடலாம். Ini tanah kita semua ( இது நமது மண் நம் அனைவருக்கும் சொந்தம்)

பிஸாவ் 7: விளையாட்டு அரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும் இசை  நிகழ்ச்சிகளுக்கும் மட்டும் பொருத்தமானதாக இருக்கும். லண்டன்  வெம்ப்ளி  அரங்கத்தில் அல்லது நியூயார்க் யாங்கி அரங்கில் ஆர்ப்பாட்டம் செய்யுமாறு  நீங்கள் மக்களைக் கேட்டுக் கொள்ள முடியாது.

மலேசியாவில் மட்டும் தான் அரங்கங்கள் பேரணிக்குப் பொருத்தமானவை.  காற்பந்தாட்டத்திற்கு அல்ல. புதிய இளைஞர் விளையாட்டு அமைச்சர் கைரி  ஜமாலுதின் அபு பாக்காரைப் போய் கேளுங்கள்.

AkuMelayuIslam: கோலாலம்பூர் மக்களில் 70 விழுக்காட்டினர் பக்காத்தானுக்கு  வாக்களித்துள்ளனர் என்பது மேயர் அகமட் பெசால் தாலிப்புக்கு தெரியாதா ?  அவர் ஒன்றுமில்லாதவர்.

கோலாலம்பூர் மக்களுக்குக் கோலாலம்பூர் சொந்தமானது. நாம் விரும்புவதை  அவரிடம் சொல்வோம். நாம் அவரைக் கேட்கவில்லை.

TAGS: