“13வது பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் இனம், சமயம் ஆகியவை கூடின பட்சம் பயன்படுத்தப்பட்டன. இப்போது நஜிப் அதனை கட்டுப்படுத்த விரும்புகிறார். அம்னோ அரவணைப்பு போக்கை அதிகம் பின்பற்ற வேண்டும் என யோசனை சொல்கிறார்.”
நஜிப் தலைமைத்துவ சவாலை எதிர்நோக்கக் கூடும்
பெர்ட் தான்: எதிர்வரும் அம்னோ கட்சித் தேர்தல் புதிய முறையின் கீழ் நடத்தப்படும். மொத்தம் 146,500 உறுப்பினர்கள் அதில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருப்பார்கள். ஏற்கனவே அது 2,000 பேராளர்களுடன் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
ஒரு தலைவர் தகுதி பெறுவதற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொகுதிகளின் அங்கீகாரம் தேவை என்னும் விதியும் அகற்றப்பட்டுள்ளது.
குறைந்த பட்ச தொகுதி அங்கீகாரத்தை தெங்கு ரசாலி பெறாததால் அவர் போட்டியிடுவதற்குக் கூடத் தகுதி பெறவில்லை. இந்த முறை மாறுபட்ட சூழ்நிலை. திறந்த போட்டி.
100,000க்கும் மேற்பட்ட பேராளர்களை சமாளிக்க வேண்டும் என்பதால் பண அரசியலும் ஜமீன்தார்களின் செல்வாக்கும் எடுபடாது. அதனை அடிப்படையாகக் கொண்டால் அம்னோவுக்குள் மூன்றாம் பிரிவுக்கு தலைமை தாங்கும் தெங்கு ரசாலி கூட போட்டியிருந்தால் வெற்றி பெற முடியும்.
நஜிப் ரசாக் அல்லது முஹைடின் யாசின் தரப்புடன் சேராத அம்னோ உறுப்பினர்கள் ரசாலியை ஆதரிக்கக் கூடும். நஜிப்பும் முஹைடினும் சமநிலையிலான வலிமையை பெற்றுள்ளனர். வாக்குகள் பிளவுபடும் போது ரசாலி வெற்றி பெறலாம்.
2009ம் ஆண்டு அம்னோ இளைஞர் தேர்தலில் கைரி ஜமாலுதின் வெற்றி பெற்றது உங்களுக்கு நினைவில் இருக்கும். அந்தப் போட்டியில் 304 வாக்குக்ள் பெற்று கைரி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்த முக்ரிஸ் மகாதீருக்கு 232 வாக்குகளும் முகமட் கிர் தோயோவுக்கு 254 வாக்குகளும் கிடைத்தன.
நம்மைப் போன்றவர்களுக்கு இது பரபரப்பான நேரம். அம்னோவை அதன் எதிரியான பக்காத்தான் ராக்யாட் வீழ்த்த வேண்டாம். அது தானே வெடித்துச் சிதறும்.
கேலி: நான் பெர்ட் தான் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன். அம்னோ பாருவில் அவர்கள் விதைத்த இன்னொரு அம்சமும் உள்ளது. 13வது பொதுத் தேர்தலில் ஒரளவு குழப்பத்தை ஏற்படுத்திய சந்தேகத்துக்குரிய ஆவி அம்னோ வாக்காளர்களாகும்.
குவிக்னோபாண்ட்: நஜிப் உண்மையில் தாம் விதைத்தை அறுவடை செய்கிறார். 13வது பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் இனம், சமயம் ஆகியவை கூடின பட்சம் பயன்படுத்தப்பட்டன. இப்போது நஜிப் அதனை கட்டுப்படுத்த விரும்புகிறார். அம்னோ அரவணைப்பு போக்கை அதிகம் பின்பற்ற வேண்டும் என யோசனை சொல்கிறார். அந்த இரு கோட்பாடுகளும் இரவு பகலும் போல வெவ்வேறானவை.
அடையாளம் இல்லாதவன்_4031: அம்னோ ஜமீன்தார்களை வளர்க்கிறது. அந்த ஜமீன்தார்கள் பதவிகளைக் கோருகின்றனர். தாங்கள் விரும்புவது கிடைக்கா விட்டால் அவற்றை வழங்கக் கூடிய மற்றவர்களை அவர்கள் நாடுவர்.
அந்த ஜமீன்தார் முறை அம்னோவைக் கறையான் போல அரித்து விடும். அது பின்னர் தீவிரக் கண்காணிப்புப் பிரிவுக்கு அனுப்பப்படும். அது உயிர்வாழ்கிறதா இல்லையா என்பது கட்சித் தலைமைத்துவத்தைப் பொறுத்தது.
அம்னோ உறுப்பினர்கள் உண்மை நிலையை உணர வேண்டும். அவர்கள் தங்கள் தலையை மண்ணில் புதைத்துக் கொண்டு அண்மைய தேர்தலில் எதுவும் நடக்காதது போல பாசாங்கு செய்யக் கூடாது. பிஎன் கூட்டணியை வலுவான சுனாமி தாக்கியுள்ளது. அது மாற வேண்டும் அல்லது மாற்றப்படும்.
டாக்: டாக்டர் பிரிட்ஜெட் வெல்ஷ் சொல்வதை நான் ஒப்புக் கொள்கிறேன். வரும் அம்னோ தலைவர் தேர்தலில் நஜிப்பை எதிர்த்துப் போட்டியிடுவதைத் தவிர முஹைடினுக்கு வேறு வழி இல்லை. காரணம் அவரும் அவரது ஆதரவாளர்களும் அம்னோ பின்பற்றும் சலுகை முறையில் ஆதாயம் பெற விரும்புகின்றனர்.
கடந்த காலத்தில் பொருளாதாரம் நன்றாக இருந்தது. எதிரணியும் பலவீனமாக இருந்தது. எல்லா அம்னோ சேவகர்களுக்கும் சலுகை வழங்க முடிந்தது. ஆனால் இப்போது பொருளாதாரம் நலிவாக உள்ளது. நாட்டின் கருவூலத்துக்குக் கிடைக்கும் பணம் குறைவாக இருக்கும் என்பதே அதன் பொருள்.
எல்லாவற்றுக்கும் மேலாக குத்தகைகள் வழி அம்னோ நாட்டு நிதிகளை தங்கள் சட்டைப் பைகளுக்கு மாற்றி விடுவதை காண எதிர்க் கட்சிகள் கழுகுகளைப் போல காத்துக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு மாற்றப்படும் போது ஒரு பிடி பிடித்து தங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்ள அவை முயலும்.
வளங்கள் சுருங்கும் போது அம்னோ சேவகர்களுக்குள் போட்டி அதிகரிக்கும்.
அம்னோ என்றால் ‘எனக்கு பணத்தைக் காட்டுங்கள்’ என்பது தானே.