கோலாலும்பூர் போர்க்குற்ற நடுவர் மன்றத்தில் தலைமை வழக்குத் தொடருனராக பணியாற்றிய சிறந்த வழக்குரைஞர் ஒருவர் மக்கள் நடுவர் மன்றத்தை வழி நடத்த உதவுவார் என்று பெர்சே அறிவித்துள்ளது.
“நன்கு மதிக்கப்படும் வழக்குரைஞரும் சட்டத்துறை பேராசிரியருமான குருதயாள் சிங் நிஜார் சாது சிங், நடுவர் மன்றத்தில் மக்கள் சார்பில் வழக்குகளை எடுத்துரைப்பார்”, என பெர்சே இணைத் தலைவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
தேர்தல் முறைகேடுகளை விசாரிக்கும் மக்கள் நடுவர் மன்றம் ஐந்து நடுவர்களைக் கொண்டிருக்கும். அவர்கள் பெயர்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றாரவர்.