கெடா, அதன் ஆறுகளிலிருந்து நீர் சேகரிப்பதற்காக பினாங்குக்குக் கட்டணம் விதிக்கப்போவதாகக் கூறுவதை பினாங்கு முதலைமைச்சர் லிம் குவான் எங் நிராகரித்துள்ளார்.
“கெடா ஒன்றும் நீர் வழங்கவில்லை. மூடா ஆறு பினாங்கு வழியே ஓடுகிறது. பினாங்கு பக்கத்திலிருந்துதான் நீரை எடுத்துக்கொள்கிறோம்.
“மேலும், மூடா ஆறு இயற்கையான ஒரு நீர் ஆதாரம். எங்கள் மாநிலம் வழியே இயற்கையாக ஓடும் ஆற்றிலிருந்து நீர் எடுக்க எதற்குக் கொடுக்க வேண்டும் கட்டணம்?”, என்றவர் வினவினார்.
கிஸ்தி, வரி, வட்டி யாரை கேட்கிறாய் வரி? எதற்கு கேட்கிறாய் வட்டி? எங்கள் மாநிலத்தில் ஓடும் ஆற்று நீருக்கு நாங்கள் வரி செலுத்த வேண்டுமா? மானம் கேட்ட மனிதனின் மவனே, சீராக ஆட்சி நடத்தும் எங்களிடம் வேண்டும் என்றல் பிச்சை கேள். துடிக்கிறது இல்லாத மீசையும், அண்டை மாநிலம் அதலால் அடக்கு,அடக்கு என்கிறது நட்பு. அடுத்த தேர்தலில் காணாமல் போய்விடும் நின் கொட்டம்.
இதுதான் மக்களை முன்னிறுத்தி அவர்களின் நமைக்காக போராடும் பி எண்ணின் சுயருபம்.
எல்லாம் அந்த மாமா குட்டி பன்னும் வேலை… கடவுள் அந்த குட்டிக்கு சீக்கிரம் ஒரு முடிவு கட்டுவார்…. பசு தோல் போர்த்திய புலி…. அந்த மாமா குட்டி…
நூலைப் போல சேலை, தகப்பனைப் போல மகன். அப்பன் தண்ணீரை வைத்துக் கொண்டு சிங்கபூருடன் நாடகமாடினான். மகன் இப்பொழுது அதே தண்ணீரை வைத்து கொண்டு பினாங்கு மக்களின் வயிற்றில் அடிக்கப் பார்க்கின்றான்! குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி குழியில் விழுந்த கதைதான்.