போலீஸ் தடுப்புக் காவலிலிருந்த போது மரணமடைந்த என் தர்மேந்திரன் குடும்பத்துக்கு நிலையான உதவி தேவை என சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் கூறுகிறார்.
அந்தக் குடும்பத்தில் வேலை செய்த ஒரே நபரான தர்மேந்திரன் மரணமடைந்து விட்டதே அதற்குக் காரணம் என்றார் அவர்.
பண்டார் துன் ரசாக் எம்பியுமான காலித், பண்டார் துன் ரசாக்கில் உள்ள அடுக்கு மாடி வீடு ஒன்றில் வசிக்கும் தர்மேந்திரன் குடும்பத்தை இன்று சந்தித்தார்.
ஆனால் அவர் தமது கட்சி அந்தக் குடும்பத்துக்கு வழங்கக் கூடிய உதவி பற்றி அவர் குறிப்பாக எதுவும் சொல்லவில்லை.
“நான் சிறப்பு உதவி குறித்து எதுவும் பேச விரும்பவில்லை. குழந்தைகளின் கல்வி கவனிக்கப்பட வேண்டும். குடும்பமும் இங்கு வாடகை வீட்டில் வாழ்கிறது. ஆகவே நிலைத்திருப்பதற்கு முறையான வருமானம் தேவை,” என்றார் காலித்.
தர்மேந்திரன் குடும்பம் தமது தொகுதியில் வசிப்பதால் தாம் அங்கு சென்றதாகத் தெரிவித்த காலித், அந்த விவகாரத்தில் ஏற்பட்டுள்ள அண்மைய மாற்றங்களையும் அறிய விரும்பியதாகத் தெரிவித்தார்.
குடும்பத்தைக் காப்பாற்ற தாம் வேலைக்கு செல்ல வேண்டியிருக்கும் என தர்மேந்திரன் மனைவி எம் மாரி கூறினார்.
“எங்களுக்கு வருமானம் தேவை. நான் வேலைக்கு சென்றதில்லை. என் கணவர் வீட்டு வாடகை உட்பட எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார்,” என அவர் மேலும் சொன்னார்.
பண்டார் துன் ரசாக்கில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றின் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 நாட்களுக்குப் பின்னர் கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் தடுப்புக் காவலில் இருந்த போது மே 21ம் தேதி மரணமடைந்தார்.
அவர் தாக்கப்பட்டதால் மரணமடைந்தார் என நோய்க்கூறு நிபுணர்
தெரிவித்துள்ளார்.
தர்மேந்திரன் கொலை தொடர்பில் மூன்று போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அவரது மரணத்துடன் சம்பந்தப்பட்ட நான்காவது அதிகாரி மறைவாக இருக்கிறார்.
நல்ல மனித நேயம் கொண்டவர் ,மந்திரி புசார் காலித்
முதலில் செலாங்கூர் மந்திரி புசார் அவர்களில் இந்த பண்பு வரவேற்க பட வேண்டும் . மக்களின் பிரச்சனைகள் குறித்து நேரடி வருகை தந்து பிரச்சனைக்கு தீர்வு காண்பதுதான் நல்ல தலைவரின் சேவை .இதனை இந்திய தலைவர்களும் பின்பற்ற வேண்டும் .
இதை போன்ற நிகழ்வுகள் நம்மவர் வாழ்வில் மீண்டும் ஒருமுறை நடக்க கூடாது.அதற்கு ஆன முதல் முதல் அடி நம்மிடேயே ஏற்பட வேண்டிய ஒற்றுமை .எவ்வித வேற்றுமை உணர்வுகளுக்கும் அங்கு இடம் இல்லை.ஒன்றுபட்டு நம்மில் வறுமை பிடியில் சிக்கி தவிப்பவர்களை அதிலிருந்து மீட்க வேண்டும்.இது நம்மவரிடேயே கோபத்தையும் வன்முறையும் குறைக்கும்.