செம்பருத்தியின் வாசகர்களுக்கு,
மலேசியாவின் முதன்மையான தமிழ் இணையத் தளமாக செம்பருத்தி.காம் உருவாக வாசகர்களாகிய நீங்கள்தான் காரணம்.
தற்போது 39,320 வாசகர்கள் 104,429 முறை எங்களின் இணையத்தளத்தை வலம் வருகிறார்கள். அவர்கள் 362,188 பக்கங்களைப் பார்வையிடுகிறார்
பிப்ரவரி 25, 2008 -இல் தொடங்கப்பட்ட எங்களின் இந்த இணையத்தளம் ஐந்தாண்டுகளைக் கடந்துள்ளது. இதன் வழி முதன்மையான உண்மையான தகவல்களை வழங்கும் தளமாகவும் விழிப்புணர்ச்சிக்கு வித்திடும் களமாகவும் செம்பருத்தி.காம் செயல்பட்டு வருகிறது.
எங்களின் இந்த அரிய வளர்ச்சிக்குக் காரணம் – தகவல் தேடும் மக்களின் தாகம்தான்! மின்னியல் முன்னேற்றம் இதற்கு பெருமளவு வழிவகுத்துள்ளது.
முன்னேறத் துடிக்கும் சமூகத்தின் எழுச்சி குரலாக செம்பருத்தி.காம் திகழ வேண்டும் என்பதில் கணிசமான பொறுப்பும் எங்களுக்கு உள்ளது.
எங்களின் செய்திகளை உள்நாட்டிலும் அயல் நாட்டிலும் மின்னியல் வழியிலும் அச்சடிப்பு வழியிலும் மறுபிரசுரம் செய்கிறார்கள். பல்கலைக்கழக மாணவர்களும் சமுக ஆய்வாளர்களும் எங்களின் தகவல்களை மேற்கோள் காட்டுகிறார்கள். விவாத மேடைகளில் பரிமாற்றம் செய்கிறார்கள்.
இவற்றில் எங்களுக்கு மிகவும் வருத்தமளிப்பது, சிலர் அதில் ‘செம்பருத்தி.காம்’-க்கு நன்றி என்பதைக் கூட குறிப்பிடுவதில்லை. இதைச் சம்
இனிவரும் காலங்களில் செம்பருத்தி செய்திச் சுருக்கத்தை மட்டுமே வெளியிடும். இதைத் தொடர்ந்து செம்பருத்தி தனது செய்தித் தரத்தை உயர்த்தவும், ஆய்வுக் கட்டுரைகளை அதிகமாக்கவும் திட்டமிட்டுள்ளது.
அன்புடன்
செம்பருத்தி ஆசிரியர்
மிகவும் மகிழ்ச்சி. முடிந்த மட்டும் ஒருதலை பட்சமாக செய்தி வெளியிடுவதை தவிர்க்கவும்.
மிகவும் மகிழ்ச்சி. என்றும் வாடா மலர் செம்பருத்தி
செம்பருத்தி ஆசிரிருக்கு நன்றி, உங்களை போல் சில நல்ல மனிதர்கள் இருப்பதால்தான் இணையத்தில் தமிழ் படிக்க முடிகிறது . பலருக்கு
இதில் விருப்பம் இல்லை . ( மாம்பழம் ருசியாக இருந்தால் கல்லடி படத்தான் செய்யும் . இதில் என்ன வருத்தம் .
இதைத்தான் தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொள்வது என்கிறார்களா?
ஆம். உண்மைதான் . நீங்கள் கூறியதுபோல் பல நாளிதழ்களில் செம்பருத்தியில் இடம் பெற்ற செய்திகள் மறுநாள் அன்றாட தினசரிகளில் வெளியிடுவது உண்மைதான். நானும் அனுதினமும் இரண்டு தமிழ் தினசரிகளை வாங்கிப் படிப்பதுண்டு .முதல் நாள் இணையத்தில் இடம்பெற்ற கட்டுரைகள் மறுநாள் அந்த தினசரிகளில் பார்பதுண்டு. பலவேளைகளில் மனம் சஞ்சல படுவதுண்டு. ஆனால் நம்மவர்கள் எத்தனை பேர் மின்னஞ்சல் சேவையை பயன்படுத்தி உண்மை செய்தியை படிக்க முடியும் ???. நாளிதழ்களில் வெளிவரும்போது பலர் படித்து தெரிந்துக் கொள்கிறார்கள் . இது நல்ல விசயம் தான். ஆனால் தினசரிகளில் வெளியிடும் கட்டுரைகள் எங்கிருந்து எடுக்கப்படுகிறது என்பதை தெரிவிக்கும் கடமை தினசரிகளுக்கு உண்டு. ஆகவே இனி வருங்காலங்களில் இம்மாதிரியான தவறுகள் இடம்பெறாமல் பார்க்க வேண்டியது பத்திரிக்கை தர்மம் ஆகும். மற்றவருடைய பொருளை அவர்களுடைய அனுமதியுடன் எடுப்பதில் எந்த தவறும் இல்லை. அனுமதி இல்லாமல் எடுப்பது திருடுவதற்கு சமம். செம்பருத்தியின் சேவை இந்நாட்டு இந்தியர்களுக்கு நிச்சயம் தேவை.
வோன்டர்ப்புள் செம்பருத்தி நியூஸ்.டெங்க் யு.
நன்றி நன்றி நன்றி
செம்பருத்திக்கு
நன்றி நன்றி நன்றி
செம்பருத்தி காம் மை உலகத் தமிழ்செய்தி நிறுவனமாக மாற்றுவதை நோக்கமாகக் கொள்ளுங்கள் .
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு