நஜிப் டாக்டர் மகாதீரிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும்

najib‘பிஎன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழந்ததற்கும் சிலாங்கூரை  மீண்டும் கைப்பற்ற முடியாமல் போனதற்கும் மகாதீரே காரணம் என்று அவரிடம்  சொல்ல வேண்டும்’

எதிர்க்கட்சிகளிடம் அரசாங்கம் கடுமையான போக்கை பின்பற்ற வேண்டும் என  டாக்டர் மகாதீர் விரும்புகிறார்

2 டிம் 1:7: மலேசிய சமுதாயத்தை இன அடிப்படையில் பிரிக்கும் தந்திரம்  இனிமேலும் வேலை செய்யாது என்பதை அந்த முதியவர் இன்னும் உணராமல்  இருப்பது வருத்தத்தை அளிக்கின்றது.

டாக்டர் மகாதீர் முகமட்டும் அவரது புதல்வர்களும் எப்படி பெரும்
செல்வந்தர்களானார்கள் என மக்கள் கேட்க வேண்டும். அவர்கள் தங்கள்
சொத்துக்களைப் பகிரங்கமாக அறிவிப்பார்களா ? அவை எப்படி வந்தன
என்பதையும் விளக்குவார்களா ?

ஈவன்ஸ்டீவன்: எனக்கு யாராவது விளக்குங்கள் ! எதிர்க்கட்சிகளிடம் கடுமையாக  நடந்து கொள்ளுமாறும் அவற்றுக்கு முகம் கொடுக்க வேண்டாம் என்றும் மகாதீர்  சொல்வதின் அர்த்தம் என்ன ?

டச்சு: வாயை மூடுமாறு டாக்டர் மகாதீரிடம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்
துணிச்சலாக சொல்ல வேண்டும். பிஎன் மூன்றில் இரண்டு பங்கு
பெரும்பான்மையை இழந்ததற்கும் சிலாங்கூரை மீண்டும் கைப்பற்ற முடியாமல்  போனதற்கு மகாதீரே காரணம் என்று அவரிடம் சொல்ல வேண்டும்.

முஷிரோ: நஜிப் அம்னோவில் நிலைத்திருக்க வேண்டுமானால் மகாதீரிடம்  கடுமையாக நடந்து கொள்வது தான் ஒரே வழி.

நஜிப்பை மகாதீர் எளிதாக ஆட்டிப்படைப்பதாக தெரிகிறது. இது மலேசியர்களுக்கு  கவலை அளிக்கிறது. நஜிப் சுயேச்சையாக இயங்க வேண்டும். தாம் தலைவர்  என்பதை நிரூபிக்க அவர் மகாதீருடைய வாயை மூட வேண்டும்.

நீதியை விரும்புகின்றவன்: 13வது பொதுத் தேர்தலில் பெரும்பான்மை ஆதரவைப்  பெறத் தவறியதால் எதிர்க்கட்சிகள் மக்கள் தீர்ப்பை ஒரே நாளில் மாற்ற  விரும்புவதாக மகாதீர் சொல்கிறார்.

எதிர்க்கட்சிகளுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லை என யார் சொன்னது  ? மொத்தம் செலுத்தப்பட்ட வாக்குகளில் பிஎன் -னுக்கு 47 விழுக்காடு தான்  கிடைத்தது. எதிரணிக்கு 51 விழுக்காடு கிடைத்தது.

எல்விபாலா: காலம் மாறுவதில்லை ஆனால் மக்கள் மாறுவர். மகாதீர் மாறவில்லை.  ஆனால் மக்கள் கால ஒட்டத்தில் மாறுவர்.

மக்கள் இப்போது விழித்துக் கொண்டு விட்டார்கள். அந்தக் காலத்தில் ஆர்டிஎம்,  டிவி3 ஆகியவை அவர்களுடைய கண்களை மறைத்தன. இன்று எல்லையில்லாத  உலகம். அனைவரும் உண்மையைத் தேடுகின்றனர். அவர்கள் அதனைக் கண்டு  பிடித்து விட்டனர். அதனை யாரும் மறுக்க முடியாது.

அட்செட்டர்: மகாதீர் இன்னும் 1980களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மக்களுக்கு  பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாமல் அரசாங்கம் விருப்பம் போல  செயல்படலாம் என அவர் எண்ணுகிறார்.

செல்வாக்கு இல்லாத இந்த அரசாங்கம் தனது ஒவ்வொரு அடியையும் கவனமாக  எடுத்து வைக்க வேண்டும். நகர்ப்புற, பகுதி நகர்ப்புற மக்களுடைய ஆதரவு  அதற்கு இல்லை. அது ‘ulu’ அரசாங்கமாகும். ஒதுக்குப்புறமானது.

மலேசியாவில் பிறந்தவன்: உண்மையில் மகாதீரிடம் தான் யாரும் முகம்  கொடுத்துப் பேசக் கூடாது. அவர் மக்களை இன அடிப்படையில்
பிளவுபடுத்துகிறார்.

 

 

TAGS: