உங்கள் கருத்து : “தங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இந்திய கைதிகளை அவர்கள் அடிக்க முடியும் என்பது வழக்கமாகி விட்டதாகத் தெரிகின்றது.”
தடுப்புக் காவலில் மரணமடைந்த கருணா உடலில் 49 காயங்கள் காணப்பட்டன
கலா: போலீஸ் தடுப்புக் காவலில் இன்னொரு இந்தியர் ரணமடைந்தார். வழக்கம் போல தாங்கள் பி கருணாநிதியை அடித்ததாக கூறப்படுவதை போலீசார் மறுத்துள்ளனர்.
இதில் எனக்கு புரியாத விஷயம் இது தான் – கருணா எந்த மோதலிலும் குற்றச் செயல்களிலும் சம்பந்தப்படவில்லை. குடும்பத் தகராறுக்குப் பின்னர் அவர் போலீஸ் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார்.
போலீஸ் நிலையத்துக்குச் செல்லும் யாரையும் அடிப்பது தான் போலீஸ் நடைமுறையா (SOP) ?
டோபிஸ்டர்ன்: பி கருணாநிதி தடுத்து வைக்கப்பட்டதில் சம்பந்தப்பட்ட எல்லா அதிகாரிகளும் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட வேண்டும். சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 505 கறுப்பு தினப் பேரணி பற்றி அதிகம் கவலைப்படாமல் போலீசார் அதனைச் செய்ய வேண்டும்.
காயம் ஏதும் இல்லை என்றும் ‘நாங்கள் அவரை அடிக்கவில்லை” என்றும் நெகிரி செம்பிலான் தலைமைப் போலீஸ் அதிகாரி ஒஸ்மான் சாலே சொல்லியிருக்கிறார்.
ஆனால் நெஞ்சுப் பகுதியிலும் கை கால்களிலும் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்ததாக தெங்கு ஜாபார் மருத்துவமனை தயவியல் ஆலோசகர் டாக்டர் ஷாரிபா சபூரா அறிக்கை வழங்கியுள்ளார். அது ஒஸ்மான் கருத்துக்கு முரணாக அமைந்துள்ளது.
முன்னாள் மலாயன்: இன்று பெரும்பாலான மலேசியர்களுக்கு Fatty liver உள்ளது. அது மரணத்தை ஏற்படுத்தாது. கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவராக நான் பணியாற்றுகிறேன். அந்த நோய்க்கூறு நிபுணர் நடு நிலையைப் பின்பற்ற முயன்றுள்ளார். அந்த மருத்துவர் மனச்சாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்.
டெல்: நானும் ஒரு மருத்துவர் தான். Fatty liver மரணத்தைக் கொண்டு வராது. உங்களுக்கு மருத்துவம் தெரியாவிட்டால் குகூல் பக்கத்திற்குச் சென்று பார்க்கவும். அந்த மரணத்துக்கு சித்தரவதையும் போலீஸ் முரட்டுத்தனமும் காரணம் என நான் எண்ணுகிறேன்.
முதிய மலேசியன்: இத்தகைய ‘இன அழிப்புக்கு’ எதிராக உண்மையான நடவடிக்கை எடுக்கும் முன்னர் எத்தனை இந்தியர்கள் சாக வேண்டும் ?
மூங்கில்: தங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இந்திய கைதிகளை போலீசார் அடிக்க முடியும் என்பது வழக்கமாகி விட்டதாகத் தெரிகின்றது
இம்ராஸ் இக்பால்: மற்றுமொரு இந்தியக் கைதி மரணமடைந்துள்ளார். கடந்த தேர்தலில் ஹிண்ட்ராப்பையும் பிஎன் -னையும் ஆதரித்த எனது இந்திய சகோதரர்கள் தங்கள் தேர்வில் இப்போது மகிழ்ச்சி அடையலாம்.
நாம் விதைத்ததை நாம் தான் அறுவடை செய்ய வேண்டும்.
——————————————————————————————————————————————-
The above is a selection of comments posted by Malaysiakini subscribers. Only paying subscribers can post comments.
தண்டனை என்பது திருந்துவதற்கு, தவறு செய்தவர்களை தண்டிப்பது நியாயம் ஆனால் ஒரு சிலர் தவறே செய்வதில்லை அவருக்கு மரணம் என்பது மன்னிக்க முடியாத செயல் இவர்களுக்கு யார் தண்டனை கொடுப்பது ???.
வேதா எங்கே உமது குரல் ?
தாதா அரசுக்கு தோதா…?