போலீஸ் தடுப்புக் காவல் மரணங்களாக இருந்தாலும் அமலாக்க நிறுவனங்களின் அதிகார அத்துமீறல்களாக இருந்தாலும் ‘கடுமையான நடவடிக்கையே’ முக்கியம், அதனை எடுக்கும் அமைப்பு அல்ல என இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுதின் கூறுகிறார்.
IPCMC என்ற போலீஸ் புகார்கள் தவறான நடத்தை மீதான சுயேச்சை ஆணையம் அல்லது EAIC என்ற நேர்மை ஆணைய அமலாக்க நிறுவனம் எதுவாக இருந்தாலும் மக்கள் கடுமையான நடவடிக்கையை விரும்புகின்றனர்,” என்றார் அவர்.
“அந்த வேலையை எந்த அமைப்பு செய்கின்றது என்பது முக்கியமல்ல.
வேலையைச் செய்து முடிப்பதே முக்கியமானது என கைரி சிலாங்கூர் சிப்பாங்கில் நிருபர்களிடம் கூறினார்.
கைரி ஜமாலுதின் இவ்வளவு நாள் என்ன தூங்கிக் கொண்டிருந்தார? எத்தனையோ இந்தியர்கள் தடுப்புக் காவலில் கொல்லபட்டனர். இது வரையில் எந்த கடுமையான நடவடிக்கையும் இல்லையே. எதோ இப்பொழுதான் புதிதாக அரசியலுக்கு வந்த மாதிர் பேசுகின்றார். இவருக்கு என்ன அம்நீசியவா?