நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாதவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு

1batu kulaகடந்த மே மாதத்தில் நாடாளுமன்றத்தின் தேவான் ரக்யாட் அல்லது தேவான் நெகாரா ஆகியவற்றின் உறுப்பினர்கள் அல்லாதவர்கள் அமைச்சர்களாகவும், துணை அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

இவர்களது நியமனம் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றும், அந்த நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டது. இதுவரையில் இது சம்பந்தமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அந்நியமனங்களை எதிர்த்து டிஎபி ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் நீதிமன்றத்திற்கு செல்கிறார்.

நாளை காலையில் கோலாலம்பூர் ஜாலான் டூத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கை பதிவு செய்கிறார். அதனைத் தொடர்ந்து காலை மணி 11.00 க்கு  ஜாலான் டூத்தா நீதிமன்ற வளாகத்தில் ஒரு செய்தியாளர் கூட்டத்தை குலசேகரன் நடத்துகிறார்.

 

TAGS: