ஆகவே இடி தாங்கி விழுந்ததற்கும் அன்வார் காரணமா ?

menaraமலேசிய அரசியல்வாதிகள் ஒருவர் மீது ஒருவர் பழி போடுவதில் வல்லவர்கள்.  இறுதியில் எதுவும் நடக்காது

மெனாரா அம்னோ பற்றிக் கேட்பதற்கு அன்வாரே சரியான மனிதர்

அடையாளம் இல்லாதவன்#15694624: உங்களுக்கு சொந்தமாக ஒரு கட்டிடம்  இருந்தால் நீங்கள் அதனை அடிக்கடி சோதனை செய்ய வேண்டும். கோளாறுகள்  இருந்தால் சரி செய்ய வேண்டும். பராமரிப்பும் அவசியமாகும்.

அந்த இடி தாங்கி சில காலமாகவே ‘கழன்றிருக்க வேண்டும்’. அது
கவனிக்கப்படவில்லை. அதற்காக பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம்  மீது பழி போட வேண்டும் ?

ஆர்1: மலேசிய அரசியல்வாதிகள் மற்றவர்கள் மீது குற்றம் கண்டு பிடிப்பதில்  வல்லவர்கள். நான் உங்களைக் குறை சொல்கிறேன். நீங்கள் அவர் மீது பழி  போடுங்கள். இறுதியில் ஒன்றும் நடக்காது.

ஸ்விபெண்டர்: முன்னாள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு பொதுப் பணி  அமைச்சராக இருந்த போது நிலச் சரிவுகள், வெள்ளம் ஏற்பட்டால் பொறுப்பைத்  தட்டிக் கழிப்பதற்கு ‘இறைவன் செயல்’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவார்.

பினாங்கு அம்னோவும் உயிர்வாழும் மனிதரான அன்வார் மீது பழி போடுவதற்குப்  பதில் அதனைச் செய்திருக்கலாம். தன்னை நல்ல கோணத்தில் காட்டும்  விஷயங்களைத் தவிர வேறு எதற்கும் அம்னோ பொறுப்பேற்றுக் கொண்டதில்லை.

பாஷ்: அந்த இடி தாங்கியின் அடித்தளம் திடீரென விலகாது. இதற்கு முன்பு பல  முறை காற்று வேகமாக வீசியுள்ளது.

கேள்வி:அந்தக் கட்டிடம் சரியான தகுதிகளைக் கொண்டவர்களால் சோதனை  செய்யபட்டதா ?

பாதிக்கப்பட்டவர்களுடைய குடும்பங்கள் கவனக் குறைவுக்கு இழப்பீடு கோரி  வழக்கு போட வேண்டும். அதனை இறைவன் செயல் என விட்டு விடக் கூடாது.

பிபூத்தே: அம்னோ இழப்பீடாக 5,000 ரிங்கிட் கொடுத்துள்ளது. அது வேடிக்கை  செய்கிறதா ? அதனால் கொடுக்க முடிந்தது அவ்வளவு தானா ? ஒருவர்  இறந்துள்ள வேளையில் அது பிச்சைக் காசு.

சிவிக்: அந்தக் கட்டிடத்துக்கு காப்புறுதி இல்லையா ? அது உரிமையாளரின்  கடமை அல்லவா ?

டி: அந்த விஷயத்தை அரசியலாக்க வேண்டாம். அதிகாரத்துவ அறிக்கைக்காக  காத்திருங்கள் என ஜைனல் சொல்கிறார்.

ஆனால் இடி தாங்கி விழுந்தது பற்றி அன்வாரைக் கேளுங்கள் என்கிறார். ஆகவே  யார் அந்த விஷயத்தை அரசியலாக்குவது ?

ஆன்: புயல் காற்றுக்கும் பருவ நிலை மாற்றத்துக்கும் வளை குடாப் போருக்கும்,  மத்திய கிழக்கு நெருக்கடிக்கும் அன்வாரே காரணம் என நான் நினைக்கிறேன்.

நம்பிக்கை 123: பெர்மாத்தாங் பாவ்-வில் ஒய்வு எடுத்துக் கொண்டிருந்த அன்வார்  அங்கிருந்த மின் விசிறியை நிறுத்த மறந்து விட்டார். அதிலிருந்து வந்த காற்று  மெனாரா அம்னோவில் இருந்த இடி தாங்கியை விழச் செய்திருக்க வேண்டும்.

 

TAGS: