அன்வார் 5 ஆண்டுகள் காத்திருக்கலாம்; மக்களால் முடியாது

1 tien chuaஆட்சிமாற்றத்துக்காக மேலும் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க மக்களுக்குப் “பொறுமை” இல்லை என்கிறார் பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா.

“அன்வார் காத்திருப்பார், மற்ற தலைவர்களும் காத்திருப்பார்கள். ஆனால், மலேசிய மக்களுக்கு மேலும் ஐந்தாண்டுகள் காத்திருக்கும் பொறுமை இல்லை.

“மேலும் ஐந்தாண்டு விரயத்தை நம் பொருளாதாரம் தாங்காது. மாற்றம் தேவை என்று அவசரப்படுபவர்கள் மக்கள்தான்”, என்று மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் கூறினார்.

“மாற்றம் தேவை என்பது அன்வாரின் விருப்பமல்ல. அது பெரும்பான்மையான மக்களின் விருப்பம்”, என்றார்.