கோத்தா திங்கி, பாசிர் கூடாங் ஆகியவற்றில் அபாயகரமான நிலையில் புகைமூட்டம்

hazeகோத்தா திங்கி, பாசிர் கூடாங் ஆகியவற்றில் புகைமூட்டம் அபாயகரமான  நிலையை எட்டியுள்ளது. சுற்றுச்சூழல் துறை அந்தத் தகவலை இன்று வெளியிட்டது.haze1

இன்று காலை 7.00 மணி அளவில் காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு 313  ஆகவும் பாசிர் கூடாங்கில் 310 ஆகவும் இருந்தது.

நேற்று காலை அந்தக் குறியீடு 313 ஆக பதிவான மூவாரில் இன்று காலை அது  183 ஆகக் குறைந்துள்ளது. அது அபாயகரமான நிலையிலிருந்து ஆரோக்கியமற்ற  நிலைக்கு குறைந்துள்ளதைக் குறித்தது.

மூவார் மாவட்டத்தில் நேற்று தொடக்கம் இரண்டு நாட்களுக்கு எல்லாப்
பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டுள்ளன.

கோத்தா திங்கி, பாசிர் கூடாங் ஆகியவற்றிலுள்ள பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

TAGS: