‘உள்துறை அமைச்சர் அவருக்கு எதிரான போலீஸ் புகாரை வெளியிட வேண்டும்’

gobindஉள்துறை அமைச்சர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி அவருக்கு எதிராக வணிகர் ஒருவர் செய்துள்ள போலீஸ் புகாரை 48 மணி நேரத்தில் வெளியிட வேண்டும் என்று இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த எச்சரிக்கையை விடுத்த பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ (இடம்)  அதன்பின் என்ன நடக்கும் என்பதைத் தெரிவிக்கவில்லை.

“அந்த அறிக்கை வெளியிடப்பட்டால் அவர் அமைச்சர் பதவியில் இருக்கலாமா கூடாதா என்பதை மக்கள் முடிவு செய்ய வசதியாக இருக்கும்”, என்றாரவர்.

அமிர் பஸ்லி அப்துல்லா என்பார், 2006-இல், ஜஹிட் காஜாங் கண்ட்ரி ஹைட்ஸ் கிளப்பில் தம்மை ஓங்கிக் குத்தினார் எனப் போலீசில் புகார் செய்துள்ளார்.