சீனாவில் ஐந்தாவது மாடியிலிருந்து விழுந்த இரண்டரை வயதுப் பெண் குழந்தை ஒன்று கீழே நின்றிருந்த ஆண்கள் சிலரால் தரையில் விழாமல் பிடித்துக் காப்பாற்றப்பட்ட பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
இந்தக் குழந்தை உறங்கிக்கொண்டிருந்தபோது அதனைத் தனியாக வீட்டுக்குள் விட்டுவிட்டு பெற்றோர்கள் வெளியில் சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது.
கண் விழித்து பார்த்தக் குழந்தை அழுது கொண்டே வீட்டு ஜன்னல் மாடத்தில் ஏறி நின்று அழுதுள்ளது.
இந்தக் குழந்தையின் அழுகுரல் கேட்டு கீழே நின்றிருந்த ஆட்கள் திரும்பிப் பார்ப்பதை கண்காணிப்பு கேமரா படங்கள் காட்டின.
குழந்தை கீழே விழ இவர்கள் சட்டென ஓடிப்போய் அக்குழந்தை கீழே விழாமல் பிடித்து அதன் உயிரைக் காப்பாற்றினர்.
இந்தக் குழந்தையை காப்பாற்றிய முயற்சியில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர், ஆனால் குழந்தையோ முகத்தில் சிறு சிராய்ப்போடு உயிர்த் தப்பியது.
சீசீ இந்தப் பெண் குழந்தையின் பெயராம். -BBC


























நல்ல மனிதர்கள் உலகில் இருக்கின்றனர்!