காட்டுத் தீயை அணைக்க இந்தோனிசியா செயற்கை மழையை ஏற்படுத்தியது

fireஇந்தோனிசியாவின் சுமத்ரா தீவில் பரவியுள்ள காட்டுத் தீயை அணைக்கும்  பொருட்டு செயற்கை மழை பெய்யச் செய்வதற்கு விமானங்கள்  பயன்படுத்தப்பட்டன. அதே வேளையில் ஹெலிகாப்டர்கள் தண்ணீரை கொட்டின.

அந்தக் காட்டுத் தீ கடந்த சில நாட்களாக எரிவதால் எழுந்த புகை மூட்டம்
இந்தோனிசியாவின் ரியாவ் மாநிலத்திலும் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் காற்றுத்  தூய்மைக் கேட்டுக் குறியீடு அபாயகரமான அளவை எட்டியுள்ளது.

சுமத்ராவில் தோட்ட உரிமையாளர்கள் நிலத்தைத் துப்புரவு செய்வதற்கு சட்ட  விரோதமாக மரங்களை சட்ட விரோதமாக வெட்டி எரிப்பதாக கூறப்படுகின்றது.

“நாங்கள் நெருப்பை அணைக்கக் கடுமையாக முயன்று வருகிறோம்,” என தேசிய  பேரிடர் நிர்வாக அமைப்பின் அவசர கால நடவடிக்கைகள் பிரிவின் தலைவர்  டோடி ருஸ்டாண்டி கூறினார்.

நேற்று 70 இடங்களில் நெருப்பு எரிந்து கொண்டிருந்ததாகவும் அந்த எண்ணிக்கை  இன்று 17 ஆக குறைந்து விட்டது என்றும் அவர் சொன்னார்.

 

TAGS: