மூவாரில் புகை மூட்ட அளவு அவசர கால நிலையை எட்டியது

hazeமூவாரில் காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு 746ஐ எட்டியது. இது அச்சமூட்டூம்  அளவாகும். சுற்றுச்சூழல் துறை ‘அபாயகரமானது’ என அறிவித்துள்ள அளவைக்  காட்டிலும் இது இரண்டு மடங்கு கூடுதலாகும்.

இதனிடையே மலாக்காவிலும் இரண்டு நிலையங்களில் அந்தக் குறியீடு அபாய  அளவைத் தாண்டியுள்ளது. பண்டாராயா மலாக்காவில் 357ஆகவும் புக்கிட்  ரம்பாயில் 334ஆகவும் அது பதிவானது.

நாட்டில் மிக அதிகமான காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு (839) கூச்சிங்கில்  1997ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதி பதிவு செய்யப்பட்டது. அப்போது  அங்கு அவசர காலம் பிரகடனம் செய்யப்பட்டது.

அத்தகைய சூழ்நிலையில் பொது மக்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்று  ஆலோசனை கூறப்படும். வர்த்தக அலுவலகங்களும் பள்ளிக்கூடங்களும் மூடப்பட  வேண்டும் எனவும் உத்தரவிடப்படும்.

ஜோகூர், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பாகாங் ஆகியவற்றிலும் காற்றுத்  தூய்மைக் கேட்டுக் குறியீடு 100க்கு மேல் பதிவானது. அது மோசமான  நிலையாகும். கிள்ளான் பள்ளத்தாக்கில் மிக மோசமான குறியீடு (188)  பதிவானது.

 

TAGS: