இயற்கை வள, சுற்றுச்சூழல் அமைச்சர் ஜி பழனிவேல், புகை மூட்ட நெருக்கடிக்குப் பதில் சீனாவிலிருந்து இங்கு கொண்டு வரப்படவிருக்கும் பண்டா கரடிகளுக்கு முதலிடம் கொடுப்பதாக டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் சாடியுள்ளார்.
“அவர் இன்று பத்திரிக்கைகளுக்கு விடுத்துள்ள அறிக்கை புகை மூட்டம் பற்றியதல்ல. மாறாக அந்த பண்டா கரடிகளுக்கான சிறப்புக் கட்டிடம், எவ்வளவு விரைவில் அவை கொண்டு வரப்படும் என்பது பற்றியதாகும்,” என அவர் சொன்னார்.
“இது அறிவுக்கு ஒப்ப இல்லை. நாம் புகை மூட்ட நெருக்கடியை
எதிர்நோக்கியுள்ளோம். ஆனால் அவர் பண்டா கரடிகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். புகை மூட்டப் பிரச்னை தீர்க்கப்படாவிட்டால் சீனா பண்டா கரடிகளை அனுப்பாமல் கூட போகக் கூடும்,” என இன்று பிற்பகல் அம்பாங்கில்
பக்காத்தான் ராக்யாட் தலைமைத்துவக் கருத்தரங்கில் பேசிய போது லிம் குறிப்பிட்டார்.