தேர்தல் மோசடிக்கு எதிராக அண்மைய எதிர்காலத்தில் மேலும் ‘505 கறுப்பு தின’ பேரணியை நடத்தும் திட்டம் எதுவும் பக்காத்தான் ராக்யாட்டிடம் இல்லை.
இவ்வாறு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அரசு சாரா அமைப்புக்கள் அத்தகைய பேரணிகளை நடத்தக் கூடும் என அவர் சொன்னார்.
“நான் அரசு சாரா அமைப்புக்களுக்காக பேச முடியாது. பக்காத்தான்
ராக்யாட்டைப் பொறுத்த வரையில் நாம் முன்னேற வேண்டும்,” என பக்காத்தான் தலைமைத்துவ மாநாட்டுக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறினார்.
“13வது பொதுத் தேர்தலில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் மோசடிகளுக்கு எதிரான போராட்டம் தொடரும். ஆனால் அது தேர்தல் மனுக்கள், மற்ற நாடுகளுடனான தொடர்புகள் வழி செய்யப்படும்” என்றார் அவர்.
அடிக்கடி நடத்தப்படும் தெருப்போராட்டங்கள் காரணமாக பக்கத்தான் மீது எங்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு விட்டது. இந்தியர்களின் நலனை காப்பதில் பக்காத்தானும் பாரிசான் போல் அலட்சியம் காட்டுகிறதோ என்ற எண்ணமும் ஏற்படுகிறது.
இந்த முடிவு நல்லது தான். இனி மேல் எந்த பிரச்சனை என்றாலும் நீதி மன்றத்திற்கு கொண்டு சென்று வாதாடலாம். மக்கள் பல வாரங்கள் உங்கள் 505 கூட்டத்திற்கு சென்று கலைத்து விட்டார்கள். அடுத்தது நீதி மன்றங்களில் சந்திப்போம்…
நண்பர் கணபதி அவர்களே ! அன்வார் அவர்கள் ஒரு முறை சொன்னார் ,மலேசிய இந்தியர் பிரச்சனைகள் தேசிய பிரச்சனை என்று ! நீங்கள் ஏன் இனவாதமாக கருத்து சொல்கிறீர் ? பல காலமாக மலேசிய இந்தியன் BN னில் ஊறியதால் வந்த பழக்க தோஷமோ ?
அந்த தேசிய பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு முன் … பக்கத்தான் இந்தியர்களின் பிரச்சனையை பாருங்கப்பா …
பாக்காத்தான் இனி நாடு முன்னேற்றம் சமூக முனேற்றம் குறித்து சிந்திக்க வேண்டும். ஆடிக் கடி தெரு போராட்டம் செய்து எங்களின் நேரத்தை விரயம் பண்ண வேண்டாம். நீதி மன்றத்திற்கு உங்களுடைய பிரச்சனையை கொண்டு செல்லுங்கள். மக்களின் பணம், நேரம், உழைப்பு வீணடிக்க படுகிறது.