மங்கோலியப் பெண் அல்டான்துயா ஷரீபு கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தலைமை இன்ஸ்பெக்டர் அசிலா ஹட்ரி, கார்ப்பரல் சிருல் அஸ்ஹார் உமர் ஆகியோரின் மேல்முறையீட்டு மனுமீது மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடங்கியது.
நீதிபதி முகம்மட் அபாண்டி அலி தலைமையில் மூவரடங்கிய நீதிபதிபதிகள் குழு அதை விசாரிக்கிறது.
அக்குழுவில் இடம்பெற்றுள்ள மற்ற இருவர் நீதிபதிகள் லிண்டன் அல்பர்ட், தெங்கு மைமூன் துவான் மாட் ஆகியோராவர்.
முகம்மட் அபாண்டி முன்பு கிளந்தான் அம்னோ பொருளாளராக இருந்தவர்.