தவறு செய்துள்ள மலேசிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என அமைச்சர் இந்தோனிசியாவிடம் சொல்கிறார்

1 haze1இந்தோனிசியா,  மலேசிய நிறுவனங்கள் சம்பந்தப்பட்டிருந்தாலும் புகை மூட்ட  நிலவரத்துக்குப் பொறுப்பானவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்  என சுகாதார அமைச்சர் எஸ் சுப்ரமணியம் கூறுகிறார்.

“புகை மூட்டத்துக்கு மலேசிய நிறுவனங்கள் காரணமாக இருந்தாலும் கூட  உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நான் இந்தோனிசிய அதிகாரிகளைக்  கேட்டுக் கொள்கிறேன்,” என அவர் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்  நிருபர்களிடம் கூறினார்.haze1

புகை மூட்டத்துக்கு பின்னணியில் மலேசிய நிறுவனங்கள் இருப்பதற்கான ‘ஆதாரம்  இல்லை’ என்றாலும் அதில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கண்டு பிடிக்கப்படும் மலேசிய  நிறுவனங்களுக்கு எதிராக எடுக்கப்படும் எந்த நடவடிக்கையையும் மலேசியா  ஆதரிக்கும் என்றும் அவர் சொன்னார்.

அந்த நிறுவனங்கள் இந்தோனிசிய மண்ணில் இயங்குவதால் ‘அவசியமானதை’  இந்தோனிசிய அரசாங்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் கருதுகிறார்.