இந்தோனிசியா ரியாவ் மாநிலத்தில் மூண்டுள்ள காட்டுத் தீயை அணைக்க அரசாங்கம் 2 மில்லியன் அமெரிக்க டாலர் அல்லது 20 பில்லியன் ரூப்பியாவையை செல்வு செய்ய வேண்டியிருக்கும் என அந்த நாட்டின் தொழில் நுட்ப மதிப்பீடு பயன்பாட்டு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
அந்த காட்டுத் தீயிலிருந்து எழுந்த புகை, ரியாவ் மாநிலத்தையும் அண்டை நாடுகளான சிங்கப்பூரையும் மலேசியாவையும் கடுமையாகப் பாதித்துள்ளது.
‘செயற்கை மழையை ஏற்படுத்துவது போன்ற தீயை அணைக்கும்
நடவடிக்கைகளுக்கு நிதி அளிக்க அந்தப் பணம் பயன்படுத்தப்படும் என அந்த நிறுவனத்தின் செயற்கை மழைத் திட்டத்தின் தலைவர் ஹெரு விடோடோ, பெக்கான் பாருவில் கூறினார்.
செயற்கை மழை பெய்யச் செய்வதற்கு தமது நிறுவனம் பல முறை முயற்சி செய்ததாகவும் காட்டுத் தீ பல இடங்களில் பரவியிருப்பதால் புகை மூட்டம் அடர்த்தியாக இருப்பதாக அவர் சொன்னார்.