“அந்த மலேசிய நிறுவனங்களை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லுங்கள், அபராதம் விதியுங்கள். அவற்றை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புங்கள். அந்த நிறுவனங்கள் எங்கிருந்து வந்தன, யாருக்குச் சொந்தம் என்பது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை.”
ஜகார்த்தா: மலேசியாவுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு சொந்தமான நிலத்தில் நெருப்பு
அடையாளம் இல்லாதவன்#19098644: சட்டத்தை மீறுகின்றவர்கள்
இந்தோனிசியர்களாக, மலேசியர்களாக, சிங்கப்பூரர்களா, உள்ளூர் குடியானவர்களா, நிலச் சொந்தக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் மீது சட்டத்தை அமலாக்குவது இந்தோனிசிய அரசாங்கத்தின் கடமையாகும்.
ஆதாரத்தைப் பொறுத்த வரையில் அது பார்வையற்றதாக இருக்க வேண்டும் அல்லது முட்டாளாக இருக்க வேண்டும் அல்லது பாசாங்கு செய்ய வேண்டும். நெருப்பு எங்கே எரிகிறது என்பது கூட தெரியாததைப் போல ஜகார்த்தா நடிக்கின்றது.
நம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ள பொருளாதார, சுகாதார இழப்புக்களுக்காக மலேசியாவும் சிங்கப்பூரும் மற்ற அண்டை நாடுகளும் இந்தோனிசியாவிடமிருந்து இழப்பீடு கோரி வழக்குத் தொடர வேண்டும்.
அடையாளம் தெரியாதவன்#32557251: அந்த நிறுவனங்களை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லுங்கள். அவற்றின் இயக்குநர்களை ஜெயிலில் போடுங்கள். அப்படிச் செய்தால் அந்த நிறுவனங்கள் இது போன்ற எரிக்கும் நடவடிக்கைகளில் மீண்டும் ஈடுபட மாட்டா.
இந்தோனிசிய அரசாங்கம் சொல்வதைச் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. கடந்த 20 ஆண்டுகளாக நாம் அதன் நடவடிக்கைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம்.
வோங்100: ஜகார்த்தா சொல்வது உண்மை என்றால் இரக்கம் காட்ட வேண்டாம். மலேசிய அரசாங்கத்தைப் போன்று மலடாக இருக்க வேண்டாம். அந்த நிறுவனங்கள் மீது வழக்குப் போடுங்கள். அவற்றை மூடுங்கள்.
நில்: நெருப்பு இருந்தால் புகையும் இருக்கும். நீங்கள் எந்த விசாரணையைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் ? உங்களிடம் ஆதாரம் உள்ளது.
அந்த நிறுவனங்களை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லுங்கள், அபராதம் விதியுங்கள். அவற்றை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புங்கள். அந்த நிறுவனங்கள் எங்கிருந்து வந்தன, யாருக்குச் சொந்தம் என்பது பற்றி எங்களுக்குக் கவலை இல்லைd.
அடையாளம் இல்லாத பூனை: அவை மலேசிய நிறுவனங்கள் என்றால் நடவடிக்கை எடுக்க முடியாது என இந்தோனிசிய அமைச்சர் சொல்ல வருகிறாரா ? இது பொருத்தமான வாதமா ?
புதிய மலேசியா: இத்தகைய பொறுப்பற்ற காரியங்களுக்கு முக்கியமான காரணம் ஊழலாகும். அதனைச் செய்தவர்களுக்குத் தெரியும் எப்படி அதிகாரிகளுடைய பிடியிலிருந்து தப்புவது என்று.
அடையாளம் இல்லாதவன்_40f4: இந்தோனிசியாவில் காடுகளை எரிக்கும் அந்த போக்கிரி நிறுவனங்கள் அம்னோ சேவகர்களுக்குச் சொந்தமானவை என நான் எண்ணுகிறேன். மலேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் (ஒராங் அஸ்லி வாக்குகள் மூலம் வெற்றி பெற்றவர்) நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார். அவர் புதன் கிழமை
இந்தோனிசியாவுக்குச் செல்கிறார்.
ஆண்டுதோறும் புகை மூட்டம் உருவானதும் உயர் நிலை அமைச்சர்கள் இந்தோனிசியாவுக்கு செல்வார்கள். எல்லாம் மக்களை ஏமாற்றுவதற்கு நடத்தப்படும் ‘சண்டிவாரா’ (நாடகம்).
அன்ஸ்பின்: நமது நாட்டில் பருவங்கள் இருக்கிறதா என என் அந்நிய நண்பர்கள் கேட்ட போது நான் -வெப்ப காலம், மழைக்காலம், புகை மூட்ட காலம் என வேடிக்கையாகச் சொன்னேன்.
மலேசியாவின் எட்டு நிறுவனங்கள் இதில் சம்பந்த பட்டுள்ளதாக இந்தோனேசியா அமைச்சர் தெளிவு படுத்தி விட்டாரே ……………….
இயற்கையோடு விளையாடாதிர் !
இந்த புகை மூட்டம் 505 பேரணிகளுக்கு இடயூராக இருக்கிறதே……..யாராவது இந்த புகை மூட்ட idea வை கொடுத்திருப்பார்களோ?
ஒவ்வொரு வருடமும் இது நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது வரையில் எந்தத் தீர்வும் காணப்படவில்லை. இந்தப் பெரிய நிறுவனங்களுக்கும் “மழைப் பெய்யும் வரை தான் கத்துவார்கள்” என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். எல்லாம் அரசியல்வாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள். திருடர்களா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!
நம் நாட்டை வழிநடத்தும் அரசியல் தலைமை எல்லாம் தூரநோக்கு
சிந்தனை கொண்டவையா ?
அறிவார்ந்த சிந்தனை கொண்ட மக்கள்நலன் பேணும் மனிதநேயம்
மிக்க மனிதர்களா ?
தானும் தன் சுற்றமும் பணத்தில் மிதந்தால்போதும் …போதும் …என்னும் நிலைப்பாடு கண்ட ஈனப்பிறவிகளா ?
சுடலை காணும் நேரம் இவைஎல்லாம் கூட வராது காண்!!!
எவனும் மார்க்கண்டேயனாக வாழ்ந்தது இல்லை !
கோடிக்கணக்கான மக்களை துன்பப்படுத்தி நெருப்பு வைப்பவன்
இந்த அரசியல் ஈனப்பிறவிகளுக்கு தெரியாமல் எதையும் பண்ண
வழியில்லை !!!
சுப்பர் மார்க்கெட்டில் நூறு வெள்ளிக்கு பொருள் திருடியவன் ஆறு ஆண்டு சிறைவாசம் அனுபவிக்க தண்டனை கொடுக்கும் நீதிபதி
உள்ள நாட்டில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை …சுகாதாரம்
கெட …திருடியவன் … மக்கள் நிம்மதியை திருடியவன் …வெறும்
தண்டனை என்ன ???
இந்த விசயத்தில் சிங்கப்பூர் கடுமையாக நடந்தால் எல்லாம் ஒழுங்காக நடக்கும்.