ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் உள்ள அதிபர் மாளிகை மீது இன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
காபூல் நகரின் மத்தியில் ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகை அமைந்துள்ளது. இதன் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட நடத்தினர். அப்போது அங்கு இருந்த அதிபரின் பாதுகாவலர்கள் எதிர் தாக்குதல் நடத்தினர். அதிபர் மாளிகைக்கு அருகில் அமைந்துள்ள சி.ஐ.ஏ. நிலையத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளும், அதிபரின் படைகளுடன் சேர்ந்து எதிர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலின் போது பெரும் சப்தத்துடன் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதாகவும், இடிந்த கட்டிடங்களின் பகுதிகள் தூக்கி வீசப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிகின்றன.
இந்த தாக்குதலின் போது அதிபர் மாளிகையில் இருந்தாரா? என்பது குறித்தும், உயிரிழப்புகள் குறித்தம் தகவல்கள் இல்லை.
அதிபர் கர்சாய் சமீபத்தில் அமெரிக்கா தலைமையில், தலிபான்களுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.