வழக்குரைஞரும் புக்கிட் குளுகோர் எம்பி-யுமான கர்பால் சிங், 2006-இல் தம் கட்சிக்காரரான அமீர் பஜ்லி அப்துல்லாவை உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி கடுமையாகத் தாக்கிக் கொலை செய்ய முயன்றார் என்று குறிப்பிட்டு அதற்காக அவர்மீது சட்டத்துறை தலைவர் (ஏஜி) வழக்கு தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“அமீர் பஜ்லி அப்துல்லாவுக்கு ஏற்பட்ட காயங்களையும் அவருக்கு எதிரான போலீஸ் புகாரையும் பார்க்கும்போது ஏன் இவ்வளவு காலமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
“நாட்டின் லட்சணம் இப்படி இருக்கிறது”, என்றாரவர்.
ஆட்சி அவங்கே கைகளில் இருக்குலே அதான்…