சட்டபூர்வமான போதை மருத்துக்களின் பாவனை அச்சமூட்டும் அளவுக்கு அதிகரித்திருப்பதாக போதை மருந்து மற்றும் குற்றங்கள் குறித்த ஐநாவின் அலுவலகம் எச்சரித்துள்ளது.
ஹெரோயின் மற்றும் கொக்கெயின் போன்ற பாரம்பரிய போதை மருந்துகளின் பயன்பாடு உலக மட்டத்தில் ஸ்திரமாக இருக்கின்ற அதேவேளை, புதிய போதைப் பொருட்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்திருப்பதாகவும், அவற்றைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் திண்டாடுவதாகவும் ஐநாவின் உலக போதை மருந்துகள் குறித்த புதிய அறிக்கை கூறுகிறது.
இந்தப் புதிய வகை போதை மருந்துகள் பாரம்பரிய போதைப் பொருட்களை விட பல மடங்கு ஆபத்தானவை என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
இந்த வகையான புதிய போதை மருந்துகள் பெரும்பாலும் ஆசியாவிலேயே உற்பத்தியாவதாகவும், இணையதளத்தின் மூலம் அவை பரப்பப்படுவதாகவும் அது கூறுகிறது.
இது ஒரு உலக மட்டப் பிரச்சினை என்று ஐநா கூறுகின்ற போதிலும், வட அமெரிக்காவும், ஐரோப்பாவுமே இவற்றுக்கான பெரிய சந்தையாகத் திகழுகின்றன.