-அ. திருவேங்கடம், ஜூன் 27, 2013.
நாடளுமன்றத்தில் கல்வி அமைச்சரின் 1500 இந்திய மாணவருக்கு இடம் கொடுத்து விட்டோம் என்னும் பதில்ஆச்சரியமளிக்கவில்லை.இவரின் இந்த பதிலை அச்சடித்தாற் போல் ஏற்கெனெவே துணைக் கல்வி அமைச்சர் கமலநாதன் மூன்று அறிக்கைகள் வெளியிட்டிருந்தார்.
கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழைமைகளில் கமலநாதனும், நாங்களும் அவரது உதவியாளர்களுடன் சேர்ந்து தயாரித்துக் கொடுத்த பெயர் பட்டியலைச் சேர்ந்த 330 மாணவர்களுக்கு இடம் பெற்றுத் தருவதாக ஊடகங்களில் வாக்குறுதி அறிக்கையை கமலநாதன் விட்டிருந்தார்.
முகைதின் யாசின் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலின் காரணத்தால் கமலநாதன் அளித்த வாக்குறுதி நிறைவேறுமா என்பது சந்தேகமாக உள்ளது.
எது எப்படி இருந்தாலும் கமலநாதன் சொன்ன சொல் தவறாமல் நடந்து கொள்ள வேண்டும் என்பது மாணவர்களின் எதிர்பார்ப்பாகும்.
இந்த நாட்டில் தற்போதைய அரசில், உண்மையைக் கண்டறிய மாணவர் பட்டியலைக் காட்டாமலேயே 1500 என்னும் எண்ணைச் சுட்டிக் காட்டிச் சாதிக்க முடிகின்றது.அவ்வாறு ஆதாரம் இல்லாத தகவல்கள் நாடாளுமன்றத்தில் அளிக்கப்படும் போது நமது மாண்புமிகுக்கள் நால்வரும் அமைதிகாக்கின்றனர்.
ஆனால், வெளியில் நம்மைச் சந்திக்கும் போது உண்மை நிலவரத்தை அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
ஊசி முணை அளவு கூட நமது இன உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம் என மேடையில் பேசுகின்றனர்.
உண்மை நிலையை கடந்த 12-6-2013இல் எங்கள் அமைப்பினருடன் நடந்த அவரது அலுவலகச் சந்திப்பன்று கமலநாதன் ஒப்புக் கொண்டார். அவரது உதவியாளரும் நானும் சேர்ந்து ஒரு பட்டியலைச் தயாரித்து அதில் இடம் பெற்றுள்ள மாணவர்களுக்கு இடம் பெற்றுக் கொடுப்பது என பிறகு முடிவு செய்யப்பட்டது.
அந்தப் பட்டியலைப் பற்றி கடந்த 17-6-2013 திங்கள்கிழைமை அமைச்சர் சுப்ரமணியத்தை சந்தித்து விளக்கம் சொன்னேன். அவருடன் நான் இணைந்து போட்டத் திட்டப்படி, அவர் கடந்த 19-6-2013 புதன்கிழைமை அமைச்சரவைக் கூட்டத்திற்கு இப்பட்டியலைக் கொண்டு செல்ல வேண்டும். வாக்குறுதிப்படி அமைச்சர், அமைச்சரவைக் கூட்டத்திற்குக் கொண்டு சென்று அமைச்சர் இட்ரிஸ் ஜுசோவிடம் பேசி உள்ளார். அன்றையக் கூட்டத்திற்கு முகைதின் யாசின் வராததால் இட்ரிசும் எந்தச் சாதகக் கருத்தும் சொன்னதாகத் தெரியவில்லை.
ஆகக் கடைசி நிலவரப்படி மஇகா தலைவர்கள் அத்தனைப் பேரும் இந்த மெட்ரிகுலேசன் பிரச்சினையில் ஏதும் பேசாமல் ஒதுங்கிக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு முகைதின் யாசினை எதிர்த்து கருத்துச் சொல்லத் துணிவில்லை.
நமது இன மாணவர் நலன், உரிமை என்பதைவிட தங்களின் அரசு பதவிகளைத் தற்காப்பதே முக்கியம் என அவர்கள் கருதுகின்றனர்.
தேர்தலுக்கு 4 நாள்களுக்கு முன்பு அமைச்சர் சுப்ரமணியம் 1500 இடம் பெற்றுக் கொடுப்பதாக ஊடக அறிக்கை விட்டிருந்தார். அந்த வாக்குறுதி இப்போது காற்றில் பறந்து போய்விட்டது.
பெற்றோர்களின் மனக்குமுறலை வெளிப்படுத்த வரும் புதன் கிழைமை 3-7-2013இல் புத்ராஜெயா பிரதமர் அலுவலகம் முன்பு 1500 பெற்றோர்கள் கூடுவர். பிரதமர் கொடுத்த 1500 என்னும் எண்ணிக்கையை எப்படி அவர் நிறைவேற்றுவார் என்பதை அவரிடமே கேட்போம்.
நமது வருகை பிரதமர் அலுவலகத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் அறிவித்த அந்த 1500 இடங்கள் இந்திய மாணவர்கள் நிரப்ப அரசியல் கட்சிகள் ஒன்றிணைத்து குரல் கொடுக்க வேண்டும் .
List entry matriculation 2013/2014.
1.Matriculation Tangkak JB – Total indian student is 120person only.
2.Matriculation Kepala Batas P.Penang – Total indian student is 80person only.
MIC = பதவி ஆசையால் சமுதாய கொலையாளிகள் ..!
வேதமூர்த்தியின் மௌனம் வேதனை அளிக்கிறது .டத்தோ பழனிவேல், டத்தோ சுப்ரா, டத்தோ சரவனண், கமலநாதன் இவர்கள் இருந்தென்ன அல்லது இ…………….இவர்களால் இந்திய மாணவர்கள் பயனடையப்போவதில்லை ! வருங்காலங்களில் இந்திய மாணாவர்களும் , சமுதாயமும் தன்னிலை அறிந்து கஷ்டப்பட்டு உழைத்தால்தான் முன்னேறமுடியும் . சீனர்களைகப்போல் தன் மானத்துடன் இருந்து சாதிக்கவேண்டும் .
ம.இ.கா.வினர் சாமிவேலு காலத்திலிருந்து மௌனச் சாமியாராகி விட்டனர். சாமிவேலாவது உள்ளே வாய்த் திறக்காமல் வெளியே வந்து தனது வாய்ச்சவடாளைக் காட்டிக் கொண்டிருந்தார். இப்போது அந்த வாய்ச் சவடாலை சரவணனிடம் காண முடிகிறது. இவர் தான் ஊசி முனை அளவுக் கூட விட்டுக் கொடுக்காதவர்! அவரைத் தலைவராக்குங்கள். ஊசி பாசி விக்கும் அளவுக்கு நம்மை கீழ் நிலைக்குக் கொண்டு வந்து விடுவார்! நண்பர் தன்மானத் தமிழன் சொன்னது போல நம்மைத் தான் நாம் நம்ப வேண்டும். தலைவர்களை அல்ல! நமது வலிமை தான் பேசும். வறுமை பேசாது!
அரசாங்கம் (பிரதமர்) அறிவித்த அந்த 1500 இடங்கள் இந்திய மாணவர்களைக் கொண்டு நிரப்பியிருந்தால் அந்த மாணவர்களின் பெயர்ப் பட்டியலை வெளிடுயிடுங்கள். அப்படி அது பொய் என்றால், அதற்கு பொறுப்பேற்று அமைச்சரவையில் உள்ள (வேதா உட்பட) அத்தனை இந்திய பிரதிநிதிகளும் உடனடியாக அரசுப் பதவியில் இருந்து விலக வேண்டும்; அதாவது அவர்களுக்கு மானம், ரோஷம் என்பது மருந்துக்காவது இருந்தால்..!
டேய், டத்தோ வி டி லிங்கத்தினை பாருங்கடா… அவரின் முடிவின் பின் வரும் மாற்றத்தைக் கருத்தில் கொண்டு ராஜினாமா செய்துள்ளார்…
மானம் உள்ளவன் இந்த தமிழன்….நீங்களோ ….. து…து…து…துப்பு!!!!!
பதவி ஓய்வு பெற்ற டத்தோ வி டி சிங்கத்திற்கு பாராட்டுக்கள்.
மக்களின் நலனை கருத்தில் கொண்டு வழங்கிய தீர்ப்புக்கு எனது வாழ்த்துக்கள்…..