“அந்தத் தடுப்புக் காவல் மரணத்துக்குக் காரணமான அவரும் போலீஸ் அதிகாரிகளும் தீர்ப்பு பணத்தைச் செலுத்துமாறு செய்யப்பட வேண்டும். மக்கள் வரிப்பணத்திலிருந்து கொடுக்கப்படக் கூடாது.”
குகன் குடும்பம் அரசாங்கத்திற்கு எதிரான சிவில் வழக்கில் வெற்றி பெற்றது
டாக்டர் சுரேஷ் குமார்: மதிப்புக்குரிய உயர் நீதிமன்ற நீதிபதி விடி சிங்கம் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ஆதாரங்கள் அடிப்படையில் அச்சமின்றி யாருக்கும் சாதகமாக இல்லாமல் தமது கடமையைச் செய்துள்ளார்.
என்றாலும் அந்தத் தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் முறையீடு செய்து கொள்ளக் கூடும் என்பதால் நாம் மகிழ்ச்சி அடைவதற்கு இன்னும் காலம் கனியவில்லை.
ஜேஎம்சி: போலீஸ் லாக்கப்-களும் போலீஸ் நிலையங்களும் ஒவ்வொரு மனிதனுக்கும் பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும். குற்றம் புரியப்படும் இடமாக மாற்றப்படக் கூடாது- விடி சிங்கம்
நேர்மையான நீதிபதியின் துணிச்சலான சொற்கள் அவை- இன்றைய மலேசிய நீதித் துறையில் அவர் அரிதான மனிதர். என்றாலும் குகனைத் தாக்கியவர்கள் இன்னும் வெளியில் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.
ஏரியஸ்46: அந்தத் தீர்ப்பை வெற்றி எனச் சொல்வதை விட குகன் குடும்பத்துக்கு ஒர் ஆறுதல் என்று தான் சொல்ல வேண்டும். எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஒர் உயிர் இழப்புக்கு ஈடாகாது.
அரச மலேசியப் போலீஸ் படையில் உள்ள அந்த கொலைகாரர்கள் அந்த கொடூரமான குற்றத்துக்கு பணம் செலுத்துமாறு செய்யப்பட்டால் குடும்பத்தினர் மேலும் திருப்தி அடைவர் என வழக்குரைஞர் என் சுரேந்திரன் சொல்வதை நான் ஒப்புக் கொள்கிறேன்.
இப்போது அவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். அவர்கள் பிடியில் விழுகின்ற அப்பாவிகளுக்கு ‘உடனடி மிரட்டலாகவும்’ இருக்கின்றனர்.
முறையீடு செய்வது என அரசாங்கம் முடிவு செய்தாலும் இந்த ஆட்சி மீதும் தேசிய போலீஸ் படைத் தலைவர் மீதும் மற்ற பிரதிவாதிகள் மீதும் அழியா மை கறை ஏற்பட்டுள்ளது.
குவிக்னோபாண்ட்: ஐஜிபி காலித் அபு பாக்கார் விலக வேண்டும். அது இன்னும் கிரிமினல் குற்றம் என நிரூபிக்கப்படா விட்டலும் அவர் தமது கடமைகளில் கவனக் குறைவாக நடந்து கொண்டுள்ளார் என்பது தெளிவாகும்.
ஒஎம்ஜி!!: அந்த ஐஜிப் நீக்கப்பட வேண்டும். அந்தத் தடுப்புக் காவல் மரணத்தை ஏற்படுத்திய அவரும் போலீஸ் அதிகாரிகளும் தீர்ப்பு பணத்தைச் செலுத்துமாறு செய்யப்பட வேண்டும். அது மக்கள் வரிப்பணத்திலிருந்து கொடுக்கப்படக் கூடாது.
கோகிடோ எர்கோ சம்: அந்த முடிவை குகன் குடும்பம் மட்டுமின்றி சரியான சிந்தனையைக் கொண்ட எல்லா மலேசியர்களும் போற்ற வேண்டும். நீங்கள் உங்கள் தோழர்களிடையே அரிதான பிறவி.