சுஹாக்காம்: அவசர காலச் சட்டங்கள் மீண்டும் வேண்டாம்

emergencyகுற்றச் செயல்களைத் தடுக்கும் பொருட்டு தடுத்து வைப்பதற்கு வகை செய்த  1969ம் ஆண்டுக்கான அவசர கால (பொது ஒழுங்கு குற்றத் தடுப்பு) சட்டத்தை  மீண்டும் கொண்டு வர வேண்டும் அல்லது அது போன்ற சட்டத்தை இயற்ற  வேண்டும் எனக் கூறப்பட்டுள்ள யோசனைகளை சுஹாக்காம் (மலேசிய மனித  உரிமை ஆணையம்) ஆதரிக்கவில்லை.

சமூக ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை சுஹாக்காம் ஏற்றுக்
கொண்டாலும் அவசர காலச் சட்டத்தை மீண்டும் கொண்டு வருவது பின்னோக்கிச்  செல்வதாகும் என அதன் தலைவர் ஹாஸ்மி அஹாம் நேற்று விடுத்த அறிக்கையில்  கூறினார்.emergency1

விசாரணை இல்லாமல் தடுத்து வைப்பதற்கும் அனுமதிக்கும் சட்டம், அனைத்துலக  மனித உரிமைப் பிரகடனத்தின் 7வது பிரிவுக்கும் கூட்டரசு அரசமைப்பின் பிரிவு 8  (1)க்கும் எதிரானது என அவர் விளக்கினர்.

“குற்றச் செயல்கள் மலேசியாவில் மட்டுமின்றி பல நாடுகளிலும் அதிகரித்து  வருகின்றன. அதற்காக பின்னோக்கிச் செல்லும் நடவடிக்கைகளை எடுப்பது மனித  உரிமைகள் விவகாரத்தில் நாட்டை பின் தங்கச் செய்து விடும்,” என அவர் மேலும்  சொன்னார்.

 

TAGS: