தேசிய குத்துச் சண்டை வீரரைத் தாக்கியதற்காக அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சிறைத் தண்டனை

தேசிய குத்துச் சண்டை வீரர் முகமட் பர்ஹான் முகமட் ஹரோனுக்கு கடுமையான  காயத்தை ஏற்படுத்தியதற்காக ஜோகூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கும்  மேலும் இருவருக்கும் ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றம் இன்று நான்கு  ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.farhan

28 வயதான துங்கு நிக் தாஜுடின் இஸ்வான் ஷா துங்கு காடிர், 42 வயதான  அலக்ஸ் பூ ஹீ வீ, முகமட் அரிப் ஹுசின் ஆகியோர் பர்ஹானுக்கு  வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்தியதாகத் தீர்ப்பளித்த பின்னர் நீதிபதி ஸாம்ரி  பாக்கார் அந்தத் தண்டனையை விதித்தார்.

மேல் முறையீடு செய்வதற்காக தண்டனையை நிறுத்தி வைக்குமாறு அந்த மூவரும்  செய்து கொண்ட விண்ணப்பத்தை நீதிபதி நிராகரித்தார்.

சீ விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்றவருமான அந்த தேசிய  குத்துச் சண்டை வீரருக்காக வழக்குரைஞர் கோபிந்த் சிங் டியோ வழக்கு  விசாரணையை கவனித்தார்.