வாக்காளர் பட்டியலில் உள்ள 40,000 பெயர்கள் “ஐயத்துக்குரியவை”, இசி

இசி என்ற தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் உள்ள 40,000 பேர்களின் பெயர்களை வெளியிடவிருக்கிறது. அந்த பெயர்களுடைய உண்மை நிலை குறித்து தான் உறுதி செய்ய முடியாத நிலையில் இருப்பதாக அது கூறியது.

பொது மக்கள் ஆழமாக ஆய்வு செய்வதற்காக அந்த பெயர்கள் அனைத்தும் இசி இணையத் தளத்தில் வெளியிடப்படும் என்று ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் கூறினார்.

அந்தப் பட்டியலில் உள்ள தனிநபர்கள் தங்களுடைய நிலை குறித்து தெளிவுபடுத்திக் கொள்வதற்கு இசி-க்கு உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

“சில தகவல்களை உறுதி செய்ய முடிவு செய்யவில்லை. வாக்காளர் பட்டியலில் அந்தப் பெயர்கள் தேசியப் பதிவுத் துறையின் விவரங்களுடன் ஒத்துப் போகவில்லை.”

அந்த வாக்காளர்கள் உயிருடன் இருக்கின்றனரா இல்லையா என்பதையும் நாங்கள் உறுதி செய்து கொள்ள விரும்புகிறோம்”, என அப்துல் அஜிஸ் இன்று ஷா அலாமில் நிருபர்களிடம் கூறினார்.

“சந்தேகத்துக்குரிய” அந்தப் பெயர்கள் எண்ணிக்கை சிறியது என வருணித்த அவர், அந்தப் பிரச்னை இப்போது தீர்க்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

TAGS: